கடுப்பில் இருந்த படக்குழு… ஆனால் கண்ணழகை காட்டி கவிழ்த்த அமலாபால்…

Published on: October 28, 2023
amalapaul
---Advertisement---

Actress Amala Paul: கேரள சினிமா நடிகையான அமலாபால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் மைனா திரைப்படத்தின் மூலமே பிரபலமானார். இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

பின் தெய்வதிருமகள், வேட்டை, தலைவா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவரின் கண்களே இவருக்கு பல படங்களில் வாய்ப்பினை வாங்கி கொடுத்தது. மேலும் கடாவர், ஆடை போன்ற திரைப்படங்களின் மூலம் தனியொரு பெண்ணாக துணிவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:குட்டி ஸ்டோரியை சொல்ல ரெடியான விஜய்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்த ‘லியோ’ டீம்

இவர் தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தபோது இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மீது காதல் கொண்டார். இவர்கள் இருவரும் பின் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் ஏ.எல்.விஜயின் குடும்பத்திற்கும் அமலா பாலுக்கும் ஒத்து போகாததால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பின் இன்று வரையும் தனியாக வாழ்ந்துவரும் அமலாபால் சமீபத்தில் அவரது பிறந்த நாளன்று தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவ்வாறு அவர் பதிவிட்ட வீடியோ இனையத்தில் வைரலானது. ஆனால் இப்படி இன்று பேசப்படும் அமலாபால் ஆரம்பத்தில் விளம்பரபடங்களில் நடித்துள்ளார். அப்போது அதை பார்த்த மலையாள இயக்குனர் ஒருவர் இவரை வைத்து படம் இயக்கியுள்ளார். ஆனால் அவருக்கு அப்படத்தினை ரிலீஸ் செய்ய விருப்பமில்லையாம். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த பெண்ணின் கண்கள் அழகாக உள்ளது. அதனால் இப்படத்தினை கண்டிப்பாக ரிலீஸ் செய்யவேண்டும் என கூறிவிட்டாராம்.

இதையும் வாசிங்க:இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் லேடி சூப்பர் ஸ்டார்!… இவர்தான் இயக்குனரா?… அம்மணிக்கு பட்ஜெட்டே பத்தாதே…

பின் இவருக்கு தமிழில் வீரசேகரன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது இவர் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். இவரும் இவரது தாயாரும் சேர்ந்து வந்துள்ளனர். ஆனால் அப்படக்குழு இவர்களை அழைத்துவர ஆட்டோவை அனுப்பியிருந்ததாம். அப்போது ஏவிஎம்க்கு வந்து இறங்கிய அமலாபாலின் தாயார் படக்குழுவை திட்டிவிட்டாராம்.

படத்தில் நடிப்பதற்காக வரும் கதாநாயகிக்கு ஒரு கார் கூட அனுப்பி வைக்கவில்லை. ஆட்டோவை அனுப்பி வைத்துள்ளீர்கள் என கண்டபடி திட்டியுள்ளார். பின் அப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:ஏமாத்திய எல்லா ஹீரோக்களும் பல்ப்பா..? தமிழ் சினிமாவில் இந்த இடத்திற்கு வெற்றிடம்.. ப்ளூசட்டை மாறன் சாட்டையடி..!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.