Cinema News
விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய்க்கு வச்ச செக்! – தளபதிக்கு கேட்குற மாதிரி சொன்ன அம்பிகா
Actor Vijayakanth: நேற்று முன் தினம் நடிகர் சங்கம் சார்பாக விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நேரிடையாக அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்து விஜயகாந்துக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். நாசர், விஷால், கார்த்தி என நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அவரது இறுதி அஞ்சலியை அன்று நடிகர் சங்கம் சார்பாகத்தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரம் அனைவரும் வெளியூரில் மாட்டிக் கொண்டதால் அவர்களால் வரமுடியவில்லை. அதனால் நேற்று முன் தினம் பெரிய அளவில் இந்த இரங்கல் கூட்டத்தை நடத்தினர். அதில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து அவரது மகன்கள் இருவரும் மைத்துனர் சுதிஷும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஹீரோ மட்டும்தான் பழி வாங்கணுமா?.. நாங்களும் செய்வோம்!.. கதாநாயகிகள் இறங்கி நடித்த படங்கள்..
அப்போது ஏராளமான நடிகர்கள் விஜயகாந்துடனான அவரவர் அனுபவங்களை கூறினார்கள். இந்த நிலையில் நடிகை அம்பிகா விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அவரது அஞ்சலியை செலுத்தினார். அப்போது பத்திரிக்கையாளரை சந்தித்து பேசிய அம்பிகா அவருடைய முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்தார்.
அதாவது விஜய்க்கு எப்படி விஜயகாந்த் செந்தூரப்பாண்டியாக இருந்து உதவி செய்தாரோ அதே போல் சண்முகப்பாண்டியனுக்கு விஜய் ஒரு செந்தூரப்பாண்டியனாக இருந்து உதவி செய்ய வேண்டும். இது என்னுடைய ஆசை. அப்படி விஜய் வந்தால் மேல இருந்து விஜயகாந்த் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவார். அவர் மட்டுமில்லை. விஜயின் அப்பா எஸ்.ஏ.சியும் அதிகமாக சந்தோஷப்படுவார் என்று அம்பிகா கூறினார்.
ஏற்கனவே சண்முகப்பாண்டியனுக்காக லாரன்ஸும் விஷாலும் அவர் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தயார் என முன்வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை எல்லாம் விட விஜய் அதை செய்வதுதான் முறை என்ற வகையில் அம்பிகா இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: வாயோடு வாய்.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாரு? வீடியோவை வெளியிட்டு மஜா பண்ணும் நிக்கிகல்ரானி
அதுமட்டுமில்லாமல் மேலும் அம்பிகா கூறியது என்னவெனில் ‘விஜய் மட்டுமில்லாமல் மற்ற முன்னணி ஹீரோக்களும் டபுள் ஹீரோ சப்ஜக்ட் கதை வந்தால் நீங்கள் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு சண்முகப்பாண்டியனை பரிந்துரை செய்யவேண்டும். அதுதான் விஜயகாந்துக்கு நாம் செய்யும் ஒரு நன்றிக்கடனாக இருக்கும்’ என அம்பிகா கூறினார்.