Categories: Cinema News latest news

பிரபல ஹாலிவுட் நடிகரை போல் மாறிய எமி ஜாக்சன்! துரையம்மாவை இப்படியா பாக்கனும்?

Actress Amy Jackson: தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் நடிகை எமி ஜாக்ஸன்.அந்தப் படத்தில் ஒரு ஆங்கிலேயே பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.

அந்தக் கால ஆங்கிலேயே பெண்கள் போன்று தலையில் ஒரு தொப்பியும் கழுத்தில் கேமிராவையும் மாட்டிக் கொண்டு பார்ப்பதற்கே மிகவும் அழகாக காணப்பட்டார். அதோடு இளைஞர்களின் அடுத்த கனவுக் கன்னி இவர்தான் என்றளவுக்கு இந்தப் படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க:என்ன பார்த்தா அப்படியா தெரியுது!.. மார்க் ஆண்டனி டைரக்டரை கிட்டவே சேர்க்கல.. எஸ்.ஜே. சூர்யா பேச்சு!..

தொடர்ந்து ஐ, தாண்டவம், தெறி போன்ற படங்களில் நடித்து வந்த எமி ஜாக்சன் சிறிது காலம் சினிமா பக்கமே காணாமல் போனார். திடீரென ஒரு குழந்தைக்கு தாயான செய்திதான் வந்தது. திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருந்து ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.

தற்போது அருண்விஜயுடன் இணைந்து ஒரு படத்தில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் ஒரு புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் எமி ஜாக்சனை பார்த்து இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: குந்தவைக்கு கெட்டிமேளம் ரெடி!… மலையாள மருமகளாகும் த்ரிஷா? வெளியான சூப்பர் தகவல்..

பிரபல ஹாலிவுட் நடிகர் சிலியன் மார்ஃபியை போன்று அந்தப் புகைப்படத்தில் எமி ஜாக்சன் இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸான ஹாலிவுட் படமான ஓப்பன் ஹெய்மர் படத்தில் நடித்தவர்தான் சிலியன் மார்ஃபி.

amy

சிலியன்  மார்ஃபி சார் நீங்களா இது? எப்பொழுது பெண்ணாக மாறினீர்கள்? என்று எமி ஜாக்சனை கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏங்க இப்படியா அல்பமா இருப்பீங்க.. சேரன் மனைவியிடம் ப்ளீஸ் சொன்ன மிஷ்கின்… அப்பையும் ஏமாத்திட்டாரு!

Published by
Rohini