30 வயசு தாண்டிருச்சுங்க! அப்போ அந்த ஃபீல் வராதா? இவ்ளோ அப்பட்டமாவா சொல்லுவீங்க ஆண்ட்ரியா?

by Rohini |
andre
X

andre

Actress Andrea: தமிழ் சினிமாவில் ஒரு பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் பின்னனிக்கு குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இவர் குரலில் எண்ணற்ற ஹிட் பாடல்கள் வெளி வந்திருக்கின்றன.

பாடகியாக புகழ் பெற்ற ஆண்ட்ரியா அதன் மூலம் நடிகையாக மாறினார். இவர் நடித்த படங்கள் ஏராளம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தரமணி, வடசென்னை, விஸ்வரூபம், அரண்மனை போன்ற படங்களாகும். நடிப்பில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ஆண்ட்ரியா.

இதையும் படிங்க: எத்தன பேர் இருந்தாலும் நீதான் டாப்பு!.. மஞ்ச கலர் உடையில் மனசை கெடுக்கும் மாளவிகா!..

சமீபகாலமகாக வெள் நாடுகளில் கச்சேரி நடத்திக் கொண்டு வரும் ஆண்ட்ரியா அவரது நடிப்பில் பிசாசு 2, மனுசி , மாளிகை போன்ற படங்கள் வெளிவரக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அவருடைய கல்யாணத்தை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஆண்ட்ரியா. அதாவது எல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதுவும் எனக்கு 30 வயதை எட்டியவுடன் அதுதான் தோன்றியது.

இதையும் படிங்க: லால் சலாம் படம் வெளியாகும் போது இப்படி சொல்லிட்டாரே விஷ்ணு விஷால்!.. ஐயோ பாவம்!..

ஆனால் இப்பொழுது அந்த எண்ணமே இல்லை. அந்த வயசையும் தாண்டி விட்டேன். மேலும் இப்படி இருக்கிறதால் எனக்கு எந்த சோகமும் இல்லை. திருமணமாகி சில பேர் சந்தோஷம் இல்லாமலும் இருக்கிறார்கள்.அதற்கு திருமணமாகாமலேயே சந்தோஷமாக இருந்து விடலாம்.

அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை என ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். இருந்தாலும் இன்ஸ்டா , ட்விட்டர் என சமூக வலைதளங்களில் அம்மணி அவருடைய விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: என்ன தான் அம்மா பாசம் போக மாட்டிங்குதே முத்து!… விஜயா பாத்துக்கோங்க.. இல்ல கஷ்டம்

Next Story