யாரு இந்த குழந்தை நடிகை? முடிஞ்சா கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

Andrea Jeremiah
அழகான ஸ்டைலிஷ் பெண்ணாக இருந்தாலும் பாடகியாக தான் முதலில் திரைத்துறையில் நுழைந்தார்.
கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை ஆண்ட்ரியா மிகச்சிறந்த பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவருமாக பரீட்சியமானார். ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படம் இவரின் மார்க்கெட்டை உச்சத்தில் உயர்த்தியது.

andrea
இதையும் படியுங்கள்!: நான் எப்படி டிரெஸ் போட்டா உங்களுக்கு என்னடா?… பொங்கிய அமலாபால்…
தொடர்ந்து மங்காத்தா , விஸ்வரூபம், தரமணி, வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொஞ்சலுக்கு ஆகியுள்ளார். சரி இப்போ சொல்லுங்க? அந்த குழந்தை போட்டோவை பார்த்ததும் அது ஆண்ட்ரியான்னு யாரெல்லாம் கரெக்ட்டா கண்டுப்பிடிசீங்க?