Connect with us
kavin

Cinema News

கவினுக்கு வில்லியாகும் பிரபல டாப் நடிகை! இனிமே வில்லன்களின் கதி அவ்ளோதான்

Actor Kavin: வளர்ந்து வரும் ஒரு முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கவின் லிஃப்ட் மற்றும் டாடா போன்ற படங்களின் வெற்றி அவரை அடுத்த தரத்திற்கு கொண்டு சென்றது. இரு படங்களும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதிக வசூலை பெற்று மக்கள் மத்தியில் ஒரு அபிமானத்தை பெற்றார் கவின்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த கவின் அவ்வப்போது ஆங்கரிலும் கவனம் செலுத்தி வந்தார். இவரை இந்தளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் சாண்டியுடன் இவர் செய்த அட்ராசிட்டிதான் மேலும் கவினை பிரபலப்படுத்தியது. சைலண்டாக இருந்து மக்கள் நெஞ்சங்களை ஆக்கிரமித்துக் கொண்டார் கவின்.

இதையும் படிங்க: 25 வருஷமாக இதுக்கு தான் உழைச்சேன்… குடும்பமே கதறியது இதுக்கு தான்… நெகட்டிவ் டு பாசிட்டிவ் விஜே அர்ச்சனா…

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது. லாஸ்லியாவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட கவின் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். டாடா மற்றும் லிஃப்ட் படங்களின் வெற்றியால் தன் சம்பளத்தை கோடிகளில் உயர்த்திக் கேட்டார். அதனால் கோடம்பாக்கத்தில் கவின் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. நடித்தது இரண்டே படம்தான்.

அதற்குள் சம்பளம் இவ்வளை கேட்கிறாரே என்று பல இயக்குனர்கள் கவினை ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். இந்த நிலையில் ஒரு புதுமுக இயக்குனர் எடுக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். அந்தப் படத்தில் கவினுக்கு வில்லியாக பிரபல நடிகை நடிப்பதாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

இதையும் படிங்க: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானா அவர்? ரஜினியை தாழ்த்தி பேசக் காரணம் என்ன?

அவர் வேறு யாருமில்லை நடிகை ஆண்ட்ரியாதான். பிரபல பாடகியான ஆண்ட்ரியா சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிறந்தவர். கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பணத்திற்காக ஒப்புக் கொண்டு நடிக்கிறவரும் இல்லை. தனக்கான முக்கியத்துவம் அந்தப் படத்தில் இருக்கிறதா? அந்த கதாபாத்திரம் படத்திற்கு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ந்த பிறகே நடிப்பவர். அந்த வகையில் இந்தப் படத்தில் கவினுக்கு வில்லியாக நடிப்பதாக பயில்வான் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top