சிவாஜியின் கெரியரில் வாழ்வா சாவா போராட்டம்!.. நடிகர் திலகமாக ஜொலிக்க காரணமாக இருந்த அஞ்சலிதேவி!..
தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக நடிப்பு பல்கலைக் கழகமாக திகழ்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். இவரை பின்பற்றி இன்று பல நடிகர்கள் கோடம்பாக்கத்தில் சுற்றி வருகின்றனர். ஏன் இன்று இருக்கும் பல முன்னனி நடிகர்கள் கூட சிவாஜி கணேசனை பார்த்து தான் சினிமாவிற்குள்ளேயே வந்தேன் என்று சொல்லுமளவிற்கு இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கிறார்.
ஆனால் இவருடைய சினிமா பயணத்திலும் ஏராளமான கரடு முரடான பாதைகளும் இருந்திருக்கின்றன. அவற்றை கடந்து தான் இன்று உலகமே போற்றும் செவாலிய சிவாஜியாக பெருமையுடன் திகழ்கிறார். இவரின் சினிமா பயணத்தில் இவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்த படம் பராசக்தியாக இருந்தது.
ஆனால் முதலில் இவர் நடித்த படம் ‘பூங்கோதை’ என்ற திரைப்படம். அதே நேரத்தில் தான் பராசக்தியிலும் நடித்துக் கொண்டிருத்திருக்கிறார் சிவாஜி. பூங்கோதை திரைப்படத்தை அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் நடிகை அஞ்சலிதேவி தான் தயாரித்திருந்தார். பூங்கோதை திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க நடிகரை தேடும் படலத்தில் இருந்த போது தான் சிவாஜியை அறிமுகப்படுத்தினார் அஞ்சலித்தேவிக்கு நெருக்கமானவர்.
இதையும் படிங்க : கங்கை அமரனை எல்லோர் முன்னும் அவமானப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்… அடப்பாவமே!!
அதன் பின் பூங்கோதை திரைப்படத்தில் சிவாஜிக்கு வாய்ப்புக் கொடுத்தார் அஞ்சலி தேவி. மேலும் அஞ்சலி தேவி தயாரித்த முதல் படமாக இந்த பூங்கோதை திரைப்படம் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாரித்த இந்த படத்தில் இரு மொழி படங்களிலும் சிவாஜியே நடித்து வந்தார்.
பராசக்திக்கு முன்பாகவே பூங்கோதை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் பராசக்தி படத்தின் தயாரிப்பாளரான பெருமாள் முதலியார் அஞ்சலி தேவியிடம் பூங்கோதை படத்தின் ரிலீஸை கொஞ்சம் தள்ளிப் போடும் படியும் அப்படி பூங்கோதை முதலில் வெளிவந்தால் சிவாஜிக்கு காத்துக் கொண்டிருக்கும் எதிர்காலம் வீணாகி விடும் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கண்ணதாசனை வெகுநேரம் காக்க வைச்ச நடிகர்!.. பொங்கி எழுந்த நடிகவேள்.. என்ன செய்தார் தெரியுமா?..
மேலும் பராசக்தி படம் சிவாஜிக்கு நிச்சயமாக பெரிய பெயரை பெற்றுத்தரும் என்றும் அந்தப் படத்தின் மூலம் சிவாஜி ஒரு பெரிய நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் முதலில் பராசக்தி படம் வெளிவரட்டும், அதன் பின் பூங்கோதை படத்தை ரிலீஸ் செய்யும்படி வேண்டிக் கேட்டிருக்கிறார் பெருமாள் முதலியார்.
ஆனால் அஞ்சலி தேவி எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அவர் சொன்னபடியே படத்தை தள்ளிப் போட பராசக்தி படம் முதலில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்று சிவாஜிக்கு ஒரு நிலையான அந்தஸ்தை பெற்று தந்தது. அதன் பிறகு வெளியான பூங்கோதை திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் சரியான தோல்விப் படமாக அமைந்தது. சிவாஜியின் கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர்களில் பெருமாள் முதலியாரும் அஞ்சலி தேவியும் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்திருக்கின்றனர். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.