நடிக்கனு கூப்பிட்டு அவங்க எதிர்பார்த்ததே வேற! குஷ்பு படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்

by Rohini |
kushboo
X

kushboo

Anuja Reddy:தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் கிளாமர் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அதிலும் சில்க் ஸ்மிதா அந்த காலகட்டத்தில் ஒரு கனவு கன்னியாகவே வாழ்ந்து வந்தார். முன்னணி ஹீரோயின்களை விட சில்க் ஸ்மிதாவின் கால் சீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் .ஒரு படத்தில் சில்க் ஸ்மிதாவின் பாடல் இருக்கிறது என்றால் விநியோகஸ்தர்கள் வேற எதுவும் எதிர்பார்க்காமல் அந்த படத்தை உடனே வாங்கி விடுவார்கள்.

அதுவே சில்க் ஸ்மிதாவின் பாடல் இல்லையென்றால் அந்த படத்தை வாங்கவே யோசிப்பார்கள். அப்படி ஒரு புகழின் உச்சியில் இருந்தார் சில்க் ஸ்மிதா. அவருக்கு அடுத்தபடியாக டிஸ்கோ சாந்தி அதே மாதிரியான ஒரு புகழைப் பெற்ற நடிகையாக வலம் வந்தார். ஆனால் அதன் பிறகு எத்தனையோ பல கிளாமர் நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினர்.

இதையும் படிங்க:விஜய்க்கு எதிராக சிம்புவைப் பட்டை தீட்டுகிறாரா கமல்…? மணிரத்னம் படம் வந்தா தான் விஷயம் தெரியும்..!

ஜோதி மீனா அனுஜா ரெட்டி விசித்ரா போன்ற பல நடிகைகள் கிளாமர் ரோலில் பட்டையை கிளப்பினர். ஒரு ஐட்டம் பாடலுக்கு என்று மாறி குணச்சித்திர பாத்திரங்களிலும் கிளாமருடன் சேர்ந்து நடிப்பையும் வெளிப்படுத்தினார்கள். அந்த வகையில் அனுஜா ரெட்டி கவுண்டமணி செந்தில் இவர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தவர் .

அதன் பிறகு வடிவேலு பிக்கில் வந்த பிறகு அவருக்கு ஜோடியாகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். கவுண்டமணி வடிவேலு இவர்களை பொருத்தவரைக்கும் தன்னுடன் நடித்தவர்கள் வடிவேலுவுடன் நடிக்க கூடாது என கவுண்டமணி ஒரு கொள்கையை வைத்திருந்தாராம். இதைப் பற்றி அனுஜா ரெட்டி இடம் கேட்டதற்கு என்னிடம் கவுண்டமணி அப்படி சொன்னதே இல்லை என கூறினார்.

இதையும் படிங்க:இனிமே படங்களே வேணாம்!.. கடையை மூடும் லைக்கா!… சொந்த ஊருக்கே போகும் சுபாஷ்கரன்!..

அதைப்போல இப்படிநடித்தால் போதும் என அழைத்து அதையும் மீறி அவர்கள் எதிர்பார்க்கிறதையும் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையும் அனுஜாரெட்டிக்கு வந்திருக்கிறதாம். குஷ்பூ ஜெயராம் நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாராம் அனுஜா ரெட்டி.ஆனால் அந்த காட்சியில் வேறு மாதிரி எல்லாம் நடிக்க சொல்லி இருக்கிறார்கள். அதனால் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு வந்து விட்டாராம் அனுஜா ரெட்டி. இந்த மாதிரி ஏராளமான சம்பவங்கள் எங்களை போன்ற கிளாமர் நடிகைகளுக்கு நடந்திருக்கிறது என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story