இந்த பள்ளியின் நிறுவனர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவரா? அட சூப்பர் ஹிட் பட நாயகியா இவங்க

dhanush
Dhanush: கோலிவுட்டின் நடிப்பு அரக்கனாக தற்போது வலம் வரும் நடிகர் தனுஷ். ஆரம்ப காலங்களில் அவர் நடித்த கதைகளை விட சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் நல்ல ஒரு மாற்றம் தெரிகிறது. சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு ஆழமான கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்கு இணங்க அதற்கேற்றார் போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.
அதில் வெற்றியும் கண்டார். அவருக்கு அசுரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் தனுஷின் மீது ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு நல்ல மரியாதையை கொடுக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்கு அசுரன் திரைப்படத்தில் ஒரு அசுரத்தனமான நடிப்பால் அதுவும் வயது முதிர்ந்த தோற்றத்தில் தனுஷாலையும் நடிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தார் தனுஷ்.
இதையும் படிங்க: காதல் கோட்டை படத்தில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்… அப்பாவால் பறிபோன வாய்ப்பு…
இப்போது தனுஷின் நடிப்பில் அவருடைய ஐம்பதாவது படம் தயாராகிக் கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் ராயன் திரைப்படம் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து படங்களின் மூலம் பிசியாக இருக்கிறார் தனுஷ்.

aparna
இந்த நிலையில் தனுஷ் உடன் நடித்த ஒரு நடிகை பற்றிய செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது 2004 ஆம் ஆண்டு ஸ்டான்லி இயக்கிய திரைப்படம் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக அபர்ணா பிள்ளை நடித்திருப்பார். யுவன் சங்கர் ராஜா இசையில் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…
இந்த நிலையில் அதில் நடித்த அபர்ணா பிள்ளையை பற்றிய செய்தி தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சென்னையில் இயங்கி வரும் SSFI என்ற பள்ளியின் நிறுவனர் தான் இந்த அபர்ணா பிள்ளை என தெரிகிறது. அந்த பள்ளியை இவர் தான் நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.