அப்போ பார்த்தது போலவே இருக்காரே….10வது திருமண நாளை கொண்டாடும் அசின்

Published on: January 19, 2026
asin
---Advertisement---

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ரவிமோகன் நடிப்பில் வந்த குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் அறிமுகம் ஆன அவர் விஜய், அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வலம் வந்த அவர், தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோது, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்கள் தங்களது 10-வது திருமண ஆண்டைக் கொண்டாடுகின்றனர். 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அசின் – ராகுல் சர்மா திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பு திரையுலகை விட்டு வில்கி இருந்த அசின் எப்போதாவது சில புகைபடங்களை சமூகவலைதளங்களில் பகிர்வார். இந்த நிலையில் தனது 10வது திருமண நாளையொட்டி அவரது கணவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 10 வருடங்கள் ஆனாலும் அப்போது பார்த்த மாதிரியே அசின் இப்போது உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அசின்-ராகுல் தம்பதியருக்கு அரின் என்ற மகள் உள்ளார்.