விதவை பெண்ணுடன்தான் உனக்கு திருமணம்! சிவக்குமாரின் ஜாதகத்தை கணித்த நடிகை.. யார் தெரியுமா?

Actor Sivakumar: தமிழ் சினிமாவில் 70, 80களில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சிவகுமார். இளமை மாறாத மார்க்கண்டேயன் என்ற அடைமொழியுடன் இன்றளவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சிவக்குமார் .

90க்கு பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த சிவக்குமார் சூர்யா, விஜய், அஜித் போன்ற பல நடிகர்களுக்கு அப்பாவாகவும் மாமனராகவும் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சினிமாவை தாண்டி இவருடைய பொழுதுபோக்கு என்பது ஓவியம் வரைதல். அது போக யோகா செய்வது, சீரான உணவு பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு ஆகியவற்றின் மேல் மிகவும் அக்கறை கொண்ட நடிகராக இன்று தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார் சிவக்குமார்.

இதையும் படிங்க: 60 அடியில் இருந்து கீழ விழுந்த சரத்குமார்.. 6 மாத சிகிச்சை!. அந்த படத்துக்கு அவ்வளவு கஷ்டப்பட்டாரா?!

இந்த நிலையில் இவருடைய திருமணம் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது இவருடைய குடும்பத்தார் இவருக்கு பல நாட்களாக பெண் பார்த்தும் சரியான பெண் கிடைக்காத வருத்தத்தில் இருந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிவகுமாருக்கு நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததாம். ஒரு சமயம் பிரபல பழம்பெறும் நடிகையான பானுமதி சிவக்குமாரிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

banu

அதற்கு சிவகுமார் இல்லை என சொல்ல சரி நாளை வரும்போது உங்கள் ஜாதகத்தை எடுத்து வாருங்கள் என கூறினாராம். பானுமதி சொன்னதைப் போலவே சிவகுமார் அவருடைய ஜாதகத்தை எடுத்து வந்து தந்திருக்கிறார். அதை பார்த்ததும் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் உங்களுக்கு திருமணம் நடக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் குழந்தையுடன் இருக்கும் ஒரு விதவைப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறினாராம்.

இதையும் படிங்க: விழுந்தாலும் பாதாள குழியிலதான் விழுவேன்! தனுஷால எவ்வளவு பட்டாலும் திருந்தாத தயாரிப்பாளர்

இது ஒரு புறம் இருந்தாலும் பானுமதி ஒரு சிறந்த அஷ்டவதாணி என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஏனெனில் அவர் சொன்னதைப் போலவே அந்த வருடம் ஜூலை ஒன்றாம் தேதியே சிவகுமாருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இதை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின்போது கூறியிருக்கிறார்.

Rohini

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

50 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago