Connect with us
mgr

Cinema History

நாடோடி மன்னன் படத்தை எடுக்கவிட மாட்டேன்!. எம்.ஜி.ஆருடன் மல்லுக்கட்டிய பானுமதி…

எம்.ஜி.ஆர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம்தான் நாடோடி மன்னன். முதல் படத்திலேயே ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். திட்டமிட்டதை விட செலவு அதிகமாக அதுவரை தான் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்தார். அதோடு, சொந்தமாக வாங்கியிருந்த வீட்டையும் அடமானம் வைத்தார். கடனும் வாங்கினார்.

இந்த படம் வெற்றி அடைந்தால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நான் நாடோடி என சொன்னார். அந்த அளவுக்கு பணத்தை இதில் போட்டிருந்தார் எம்.ஜி.ஆர். இந்த படம் உருவாகும்போதே கடனை கேட்டு அவருக்கு பலரும் நெருக்கடி கொடுத்தனர். சிலர் நீதிமன்றத்தை நாடி அவரின் வீட்டை அபகரிக்கவும் முயன்றனர். அதையெல்லாம் சமாளித்து படத்தை எடுத்தார். இந்த படத்தை பொறுத்தவரை துவக்கம் முதலே எல்லோமே அவருக்கு பிரச்சனைதான்.

இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்காக எல்லோரிடமும் கையேந்திய இயக்குனர்!.. எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

நாடோடி மன்னன் படத்தை துவங்கியபோது அதற்கு அவர் வைத்த பெயர் உத்தம புத்திரன். ஆனால், அதே பெயரில் சிவாஜியும் ஒரு படத்தை துவங்க அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஹாலிவுட்டில் வெளியான The Prisioner of Zenda என்கிற படத்தின் கதையை தழுவியே நாடோடி மன்னன் பட கதையை உருவாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால், இதே கதையை மையமாக வைத்து நடிகை பானுமதியும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். எனவே, ‘The Prisioner of Zenda படத்தின் கதையை வைத்து தமிழில் நான் ஒரு படமெடுக்க திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் வீட்டு கொடுங்கள்’ என அவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..

நாடோடி மன்னன் பட கதை என் மனதில் நன்றாக உருவாகி இருக்கிறது. The Prisioner of Zenda படத்தில் வரும் மன்னன் வேடம் மட்டுமே நாடோடி மன்னன் படத்திலும் வரும். மற்றபடி நாடோடி மன்னன் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், அதை எடுக்க வேண்டாம் என நீங்கள் கேட்காதீர்கள்’ என டீசண்ட்டாக சொல்லிவிட்டார்.

 

உடனே பானுமதி பிடிகொடுக்கவில்லை என்றாலும் ஒரு வாரம் கழித்து ‘சரி நீங்களே அந்த படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார் பானுமதி. நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாவும் அவரே நடித்தார். ஆனால், 80 சதவீதம் படம் முடிந்த நிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுவிட்டு படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின் சரோஜா தேவியை சில காட்சிகளில் நடிக்க வைத்து படத்தை முடித்தார் எம்.ஜி.ஆர்.

அப்படி வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று எம்.ஜி.ஆரை பெரிய நடிகராக மாற்றியது. அவருக்கு ரசிகர் கூட்டத்தையும் இப்படம் உருவாக்கியது.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top