அட நம்ம ப்ளேபாய் நடிகர்! இவரைத்தான் பானுப்ரியா காதலித்தாரா? ஆனால் அங்கதான் சிக்கலே

by Rohini |   ( Updated:2023-07-21 13:36:06  )
banu
X

banu

தமிழ் சினிமாவில் ஒரு எதார்த்தமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. நிறம் கொஞ்சம் கருப்பு, முட்டக் கண்ணு, சற்று உயரம் என சினிமாவிற்கே சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். ஆனாலும் நடிப்பில் அனைவரையும் ஓரங்கட்டியவர். பரத நாட்டியத்தில் அத்துப்பிடி. எந்த கதாபாத்திரமானாலும் திறம்பட நடித்துக் கொடுப்பவர். குறிப்பாக சென்னை பாஷையில் பேசி கலக்கியவர்.

இவரை பற்றிய சில தகவல்கள் இப்போது இணையத்தில் உலா வருகின்றது. அதாவது நடித்துக் கொண்டிருக்கும் போது பானுப்ரியா யாரோ ஒரு நடிகரை காதலித்தாராம். தெலுங்கில் கண்ணபிரான் வம்சத்து பெயரைக் கொண்ட அந்த இயக்குனர் ஒரு படத்தை எடுத்தாராம். அந்தப் படத்தில் தமிழில் மிகவும் சார்மிங்கான நடிகராக வலம் வந்தவர் மிஸ்டர் கே. இவர் தான் அந்த தெலுங்கு படத்தில் ஹீரோவாம்.

banu1

banu1

அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பானுப்ரியாவும் அந்த கே நடிகரும் காதலிக்க தொடங்கினார்களாம். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் இருக்கும் போதே இவர்களின் ரொமான்ஸ் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததாம். அதை பார்த்துக் கொண்டிருந்த அந்த இயக்குனருக்கு பானுப்ரியா மீது கொஞ்சம் காட்டம் அதிகமாகியதாம்.

இதையும் படிங்க : என்னது ‘7ஜி ரெயின்போ காலனி-2’வில் இவங்கதான் ஹீரோயினா? பேசியே கொண்டுருவாங்களே?

அப்போது படப்பிடிப்பு முடிந்து பானுப்ரியா தங்கியிருந்த அறைக்கு வந்த இயக்குனர் ‘உங்க ரொமான்ஸுக்கு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது’ என்று கூறினாராம். அதற்கு பானுப்ரியா நானும் அவரும் காதலிக்கிறோம் என்று சொன்னதும் அதை கேட்ட அந்த இயக்குனர் ஏளனமாக சிரித்தாராம். அதை பார்த்து ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்? என பானுப்ரியா கேட்டாராம்.

அந்த ஹீரோ உன்னை காதலிக்கிறாரா? என இயக்குனர் கேட்க ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறார் பானுப்ரியா. உடனே இயக்குனர் அந்த கே நடிகருக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார்.அப்போது இந்த இயக்குனர் ‘என்ன இன்னைக்கு எந்த ஐட்டம் வந்துச்சு’ எனக் கேட்டாராம். அதற்கு அந்த கே நடிகர் ‘யாரனு சொல்ல’என்று பதில் சொல்லியிருக்கிறார்.

banu2

banu2

அதன் பிறகு ‘ஏதோ லவ் பண்றீயாமே?’ என இயக்குனர் அவரிடம் கேட்டாராம். அதற்கு அந்த நடிகர் ‘லவ்வா? அப்படியெல்லாம் இல்ல. சும்மா டைம் பாஸ் ’ என்று சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கேட்ட பானுப்ரியாவுக்கு ஒரே ஷாக். அவ்ளோதான் அதிலிருந்து அந்த நடிகரின் பக்கமே திரும்புவதில்லையாம். நல்ல நேரத்தில் வந்த இந்த இயக்குனர் பானுப்ரியாவை காப்பாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க : கடைசிநாள் படப்பிடிப்பில் ஏமாற்றிய விஜய்!.. அப்செட்டில் லியோ படக்குழுவினர்.. தளபதிக்கு என்னாச்சி!…

Next Story