50 ஆயிரம் பாடல்களுடன் ஒப்பிட்டாலும் தனித்து நின்ற பவதாரிணியின் பாடல் இதுதான்...!

பவதாரணியின் குரல் மாறுபட்ட தனித்துவம் வாய்ந்தது. ஒரு அப்பாவி மற்றும் குழந்தைத்தனம் கலந்த குரல். ராசய்யா படத்தில் மஸ்தானா பாடலில் தான் அறிமுகமானார். 1991ல் ரமணமாலை என்ற இசைத்தொகுப்பை இளையராஜா வெளியிட்டார். ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா என்ற பாடலைத் தான் முதன் முதலாகப் பாடினார்.

இதையும் படிங்க... தோல்வியில் முடிந்த காதல் திருமணம்!.. பவதாரிணி வாழ்வில் நடந்த சோகம்..

பாரதி படத்தில் வரும் மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலைப் பாடி அசத்தினார். இந்தப் பாடலுக்குத் தான் தேசிய விருது கிடைத்தது. அதற்குள் ஒரு அப்பாவித்தனம், டீன் ஏஜ் பெண்ணோட ஏக்கம் நிறைந்து பாடல் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும். 50 ஆயிரம் பாடல்களுடன் இந்தப் பாடலை ஒப்பிட்டாலும் இது மட்டும் தனித்து விளங்கும். அப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்தது.

இளையராஜாவின் இசையில் இவர் பாடியதில் திருப்தியான பாடல் எது என்று கேட்டால் காற்றில் வரும் கீதமே கண்ணனை அறிவாயா என்ற பாடலைச் சொல்கிறார் பவதாரிணி. இந்தப் பாடலைத் தான் ஓரளவு திருப்தியாகப் பாடினாராம். அவ்வளவு தன்னடக்கத்துடன் அவர் சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான்.

தன்னை எப்போதும் யதார்த்தமாக வைத்துக் கொள்ளும் உயர்ந்த குணம் அவருக்கு உண்டு. என்னைத் தாலாட்ட வருவாளா, இது சங்கீதத் திருநாளாம் ஆகிய பாடல்கள் செம மாஸ். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமரக்குயிலே என்ற பாடலை இளையராஜாவின் இசையில் பாடி அசத்தியிருப்பார் பவதாரிணி. இந்தப் பாடலைக் கேட்க கேட்க ஒரு மாறுபட்ட ரசனையை நமக்குத் தரும்.

இதையும் படிங்க... புற்றுநோயால் குரலை இழந்த பவதாரிணி!.. இசைஞானிக்கு இப்படி ஒரு சோகமா!..

பாடகர் கார்த்திக் அரவான் படத்துக்கு இசை அமைத்தார். அதில் உன்னைக் கொல்லப் போறேன் பாடல் அவரது குரலில் செம ரசனையைத் தரும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனேகன் படத்தில் ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி பாடல். இந்தப் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். அவரது எழுத்தில் பவதாரிணி பாடிய முதல் பாடல் இது. யுவன், ஸ்ரீகாந்த் தேவா, கார்த்திக் ராஜா ஆகியோரின் இசையில் பாடலைப் பாடியுள்ளார்.

ரேவதி இயக்கத்தில் பவதாரிணி மித்ரா மை பிரண்டு என்ற படத்துக்கு இசை அமைத்துள்ளார். மாயநதி படத்திற்கும் இசை அமைத்து அசத்தியுள்ளார். இவரது இழப்பு தமிழ்த்திரை உலகிற்கு பேரிழப்பு.

 

Related Articles

Next Story