மறுபடியும் நடிக்க வாம்மா செல்லம்!... பாவனாவின் அழகை கண்டு சொக்கிப்போன ரசிகர்கள்..
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி ஆளே மாறினார்.
பின்னர் கடினமான உடற்பயிற்சி காரணமாக மறுபடியும் தனது உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்துள்ளார்.
இதையும் படிங்க: பீஸ்ட்டை பாராட்டும் அஜித் ரசிகர்கள்…தாறுமாறா வைரலாகும் வீடியோ…
மேலும், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘மறுபடியும் நடிக்க வாம்மா செல்லம்’ என கொஞ்சி வருகின்றனர்.