ஐயோ!. பாத்தவுடனே லவ் பண்ன தோணுதே!.. நம்ம ஜோ பட நாயகி போட்டோஸ் பாருங்க!..

by சிவா |   ( Updated:2024-03-02 23:48:38  )
bhavya
X

வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் பாவ்யா ட்ரிக்கா. இவர் முதலில் நடித்த திரைப்படம் கதிர். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் 2022ம் வருடம் வெளியானது.

bhavya

bhavya

13 என்கிற படத்திலும் பாவ்யா ட்ரிக்கா நடித்திருந்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார். மேலும், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

bhavya

ஆனால், ஜோ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இப்போது பாவ்யா டிரிக்கா பிரபலமாகியிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோவாக ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த மாளவிகா மனோஜும் நடித்திருந்தார்.

bhavya

ஜோ படத்தின் இரண்டாம் பாதியில் பாவ்யா டிரிக்கா நடித்திருந்தார். பள்ளியில் படிக்கும்போது தன்னை ஒரு மாணவன் பாலியல் ரீதியாக துன்புறுத்த அதிலிருந்து தன்னை கப்பாற்றிய மாணவரை யார் என்று தெரியமாலே காதலிப்பார். அதற்குள் ரியோவுடன் அவருக்கு திருமணம் நடக்க அவரின் வாழாமல் ஒதுங்யே இருப்பார்.

bhavya

படத்தின் இறுதியில் அவரை காப்பாற்றியதே ரியோதான் என்பது தெரியவரும். இந்த கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை பாவ்யா ட்ரிக்கா வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக ஹிட் அடித்தது. மேலும், சமூகவலைத்தளங்களில் ஜோ படத்தில் பாவ்யா நடித்த காட்சிகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

bhavya

Next Story