என்னால தாங்க முடியல!.. ‘அன்பே வா’ சீரியலுக்கு குட் பை சொன்ன நடிகை !...
Anbe Va Serial: சீரியல் என்பது மக்களிடையே மிகவும் அத்தியாவசியமாகியுள்ளது. சீரியலை பார்க்காத எந்த குடும்பமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் ஒரு சீரியல் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகும் போது அது இன்னும் அதிகமான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வகையில் சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அன்பே வா சீரியல். இந்த சீரியலில் லீடு ரோலில் நடிக்கும் பூமிகாவான டெல்னா இந்த சீரியலை விட்டு விலகி விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமோக வரவேற்பை பெற்ற அன்பே வா சீரியலில் நடிக்கும் பூமிகா கதாபாத்திரமான டெல்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கதைப்படி பூமிகா இறந்து போகும் மாதிரியாக அமைய ஒரு விபத்தில் சிக்கி பூமிகா இறந்துவிட்டதாகவே காட்டுகிறார்கள். இது யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் நல்ல வரவேற்பை பெற்ற லீடு ரோலில் நடிக்கும் நடிகையை எப்படி இப்படி சாகடிக்க முடியும் என்ற சந்தேகம் இன்னும் பல பேருக்கு இருக்கிறது.
இந்த நிலையில் தான் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை பூமிகாவான டெல்னா கூறினார். அதாவது கதைப்படி நான் இறந்துவிட்டேன். இந்த சீனுக்கு முந்தைய சீனில் தான் ஒரு மோதிரத்தில் வருண் மற்றும் பூமிகா என்று பெயர் போட்டு அதை வருணிடம் நான் கொடுப்பேன். அப்போது ‘ நான் இறந்துவிட்டால் என்ன பண்ணுவ’ என்று வருணிடம் கேட்கும் மாதிரியான சீன்.
இதையும் படிங்க: பாத்து செய் செல்லம் பசங்க மனசு வீக்கு!.. ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் மாளவிகா மோகனன்…
அதை சொல்லும் போதே நான் தேம்பி தேம்பி அழுதுவிட்டேன். ஏனெனில் எனக்கு கதை தெரியும். நான் இறக்கப் போகிறேன் என தெரியும். இத்தனை நாளாக ஒரு கதாபாத்திரத்தில் பயணித்த நான் திடீரென இல்லாமல் போகப் போறேனு நினைக்கும் போது நிஜமாகவே அழுதுவிட்டேன்.
வருணும் அழுது விட்டார். மேலும் பூமிகா இல்லாமல் இந்த வருண் இனி எப்படி இருக்கப் போகிறான் என்று கேட்டதாகவும் பூமிகா கூறினார். மேலும் மீண்டும் வருவேன். ஆனால் அதற்கு கொஞ்சம் கேப் வேண்டும். அந்த கேப் தேவைப்பட்டதால்தான் இப்போது விலகுகிறேன் என பூமிகா கூறினார். இப்போது கூட நாம் சொல்லும் போது அவர்கள் நிஜ பெயர்கள் மறந்துபோய்விட்டன. அந்த வகையில் இவர்களின் கதாபாத்திரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மது – மாது.. தடம்புரண்ட சுதாகரின் வாழ்க்கை!.. கனவு நாயகன் கோமாளி ஆன கதை!..