Categories: latest news

ஐட்டம் டேன்ஸ் குயின் டிஸ்கோ சாந்தியை மட்டும்தான் தெரியும்! அவரின் மறுபக்கம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!..

Actress Disco Shanthi: 80,90களில் ஐட்டம் டான்ஸ் மூலமாக இளசுகளை கட்டிப்போட்டவர் நடிகை டிஸ்கோ சாந்தி. பழம்பெரும் நடிகரான ஆனந்தன் என்பவரின் மகள்தான் டிஸ்கோ சாந்தி. வீரத்திருமகன் படத்தில் நடித்த ஆனந்தன் தான் இவர். அப்பேர்ப்பட்ட நடிகரின் வாரிசாக இருந்து எப்படி இந்த ஐட்டம் நடனத்திற்குள் வந்தார் என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமான விஷயம்.

ஒரு காலகட்டத்தில் ஆனந்தன் தன்னுடைய செல்வாக்கு எல்லாவற்றையும் இழந்திருந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தை கட்டிக் காக்கும் பொறுப்பை டிஸ்கோ சாந்தி முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். ஒரு பக்கம் தன்னுடைய தங்கை இன்னொரு பக்கம் சகோதரர்கள் என இவருடைய குடும்பம் மிகப்பெரியது. அதனால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் காக்கும் பொறுப்பு டிஸ்கோ சாந்திக்கு வந்தது.

இதையும் படிங்க: அவர் நடிகை எனக்கு ஒரு 5 நிமிஷம் போதும்… மாஸ் நடிகையை வளைத்து போட ப்ளான் போட்ட தளபதி…

அதனால் தான் ஐட்டம் நடனத்தை தேர்வு செய்தார். எப்படி 80களில் சில்க் ஸ்மிதா ஒரு கனவு கன்னியாக இருந்தாரோ அதேபோல் ஒரு அந்தஸ்தை பெற்றார் டிஸ்கோ சாந்தி. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் இவருடைய நடனத்திற்கு என்று பல ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்த காலமும் உண்டு.

திருமண வயதை எட்டினாலும் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பொருட்படுத்தாமல் தன் தங்கைக்கும் தன் சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர் டிஸ்கோ சாந்தி. தன்னுடைய தங்கையும் நடிகையுமான லலிதா குமாரி பிரகாஷ்ராஜை காதலித்து திருமணம் செய்தார். பிற்காலத்தில் அவர்கள் திருமணம் கருத்து வேறுபாட்டால் பிரிந்தது. அதன் பிறகு டிஸ்கோ சாந்தி தெலுங்கில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீ ஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: ஆள பாத்து எடை போடாதீங்க! செல்வராகவன் வரியில் இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களா?

ஸ்ரீ ஹரி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வில்லனாக குணச்சித்திர நடிகராக அதன் பிறகு ஹீரோவாக நடித்து தெலுங்கில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அதற்கு பக்கபலமாக இருந்தவர் டிஸ்கோ சாந்தி. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அதில் ஒரு குழந்தை சிறு வயதிலேயே இறந்து போய்விட்டது. அதன் பிறகு அவருடைய காதல் கணவரான ஸ்ரீஹரியும் உடல்நிலை காரணமாக இறந்து போனார்.

தன் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி. இருந்தாலும் மீதமுள்ள தன் இரண்டு பிள்ளைகளுக்காக தன் வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு அந்தப் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து வந்தார். இப்போது தன் மகன்களில் ஒருவரை ஹீரோவாகவும் மற்றொருவரை இயக்குனராகவும் ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் டிஸ்கோ சாந்தி இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: 14 வருடத்துக்கு பின்னர் கோலிவுட்டில் நடிக்க வரும் மல்லுவுட் பிரபலம்.. எஸ்கேவால் செம விஷயம் நடந்து இருக்கே?

அது மட்டுமல்லாமல் தனக்கு வரும் சம்பளத்தை முழுவதுமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் டிஸ்கோ சாந்தி. தான் வாங்கும் சம்பளத்தில் திடீரென யாராவது உதவி எனக் கேட்டு வந்தால் அதை அப்படியே கொடுக்கும் மனப்பாங்கு கொண்டவர். இப்படி பல பேருக்கு உதவிகளை செய்து வந்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.ஐட்டம் டான்ஸ் ஆடக் கூடியவர் என்றால் அவரின் கேரக்டரை தவறாக சித்தரித்து பேசும் இந்த உலகத்தில் அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து ஜெயித்துக் காட்டியவர் டிஸ்கோ சாந்தி.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago