அந்த மாதிரியான கேள்வி.. இனி விஜய் சேதுபதி படமே வேண்டாம்.! இளம் நடிகையின் அதிரடி முடிவு.!

by Manikandan |   ( Updated:2022-07-03 08:34:06  )
அந்த மாதிரியான கேள்வி.. இனி விஜய் சேதுபதி படமே வேண்டாம்.! இளம் நடிகையின் அதிரடி முடிவு.!
X

தமிழ் சினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் இன்னும் நிலவுகிறது. அதாவது, ஒரு ஹீரோ ஹீரோயின் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தால், அவர்களை பற்றிய கிசுகிசு இணையத்தில் உலா வர ஆரம்பித்துவிடும். அந்த காலத்தில் பத்திரிகைகளில் இது பற்றி கிசுகிசுக்கள் எழும். இதனை கவனத்தில் கொண்டு பெரும்பாலும் அந்த நடிகர், நடிகைகள் மீண்டும் படங்களில் சேர்ந்து நடிக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பார்.

ஆனால், விஜய் சேதுபதி இதுபற்றி எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது. தன்னுடன் நடித்த ஹீரோயின் எத்தனை முறை நடிப்பார்கள் என்றெல்லாம் அவர் கணக்கெடுத்தது கிடையாது. அப்படித்தான் நடிகை காயத்ரியுடன் இணைந்து ஐந்து படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மூன்று விஜய் சேதுபதி படங்களில் காயத்ரியும் ஒரு நடிகையாக நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நடித்து அண்மையில் மாமனிதன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்தத் திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஒரு பத்திரிக்கையாளர் காயத்ரிவிடம் இதுவரை தொடர்ந்து ஐந்து படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளீர்கள், இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டார்.

இதையும் படியுங்களேன் - சிவகார்த்திகேயனுக்கு ஜிம் பீஸ் கட்டிய தனுஷ்.! எப்படியெல்லாம் வளர்த்து விட்டுருக்கார் பாருங்க...

இந்த கேள்வியால் நடிகை காயத்ரி டென்ஷன் ஆகிவிட்டார். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்துள்ளேன், என்னை பற்றி கேட்காமல், விஜய் சேதுபதி பற்றி கேட்கிறீர்கள்? என்று அந்த சமயம் கோபமாகி மைக்கை திருப்பி கொடுத்துவிட்டார். பின்னர் சமாதானமாகி பேட்டி கொடுத்தார். அதன் பிறகு தனது நெருங்கிய வட்டாரங்களில் இனி விஜய் சேதுபதி படங்களில் ஹீரோயினாக நடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டதாக கூறினாராம்.

Next Story