ராமராஜன் பேர சொன்னதும் கடுப்பாகி எழுந்து போன கவுதமி!.. அப்படி என்னம்மா நடந்துச்சி!...

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் ராமராஜன். நமம ஊரு நல்ல ஊரு என்கிற படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து இவர் நடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படம் இவரை மக்களிடம் பிரபலப்படுத்தியது. அப்படத்தின் பல காட்சிகளில் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு நடித்திருப்பார்.

அதன்பின் பல படங்களில் நடித்து ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார். திரையுலகில் சி சென்டர் என் சொல்ல கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் ராமராஜன் படங்கள் வசூலை வாரி குவித்தது. எனவே, இவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ஆசைப்பட்ட காலம் அது.

இதையும் படிங்க: ரஜினியை விட விஜய்க்கு அதிகம்!.. களத்தில் இறங்கி கொளுத்திப்போட்ட ராமராஜன்!…

இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் சில தியேட்டர்களில் ஒரு வருடமெல்லாம் ஓடியது. இவரை பார்த்து ரஜினி, கமலே பயந்ததாகவும் சொல்வார்கள். ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்து சில படங்களை ராமராஜனே இயக்கி நடித்தார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. ஒருபக்கம், தனது மனைவி நளினியை விவாகரத்தும் செய்து பெண் ரசிகைகளை இழந்தார். அதன்பின் பல வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்கவே இல்லை. இப்போது சாமானியன் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ராமராஜன் படங்கள் ஓடினாலும் அவருடன் நடிப்பதை பல நடிகைகள் விரும்பவே இல்லை. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அம்பிகா, ராதா, ராதிகா உள்ளிட்ட பல நடிகைகள் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிக்கவில்லை. கவுதமி, ரூபினி போன்ற சில நடிகைகள் மட்டுமே ராமராஜனுடன் தொடர்ந்து நடித்து வந்தனர்.

இதையும் படிங்க: நைட் 2 மணிக்கு! அதுவும் சட்டையில்லாமல் – ராமராஜன் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நளினி

ஊருவிட்டு ஊருவந்து, எங்க ஊரு காவல்காரன், பொங்கி வரும் காவேரி, பொண்ணுக்கேத்த புருஷன், ராஜா ராஜாதான், எங்க ஊரு மாப்பிள்ளை, நம்ம ஊரு நாயகன் என ராமராஜனுடன் பல படங்களில் நடித்தவர் நடிகை கவுதமி. இவர் ரஜினி, கமலுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

ராமராஜன் மார்க்கெட் இல்லாமலிருந்த போது நடிகர் கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘நீங்கள் ராமராஜனுடன் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்’ என கேட்டபோது உடனே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். அதற்கு என்ன காரணம் என்பது கவுதமிக்கே வெளிச்சம்.

இதையும் படிங்க: அவர் மியூசிக் போட்டா நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த ராமராஜன்!.. நடந்தது இதுதான்!..

 

Related Articles

Next Story