Connect with us
hema

Cinema News

படத்த விட என் உயிர்தான் முக்கியம்.. தயாரிப்பாளரை பார்த்து பயந்த நடிகை! அப்படி என்ன செய்தார்

Actress Hemamalini: தென்னிந்திய சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்தான் நடிகை ஹேமமாலினி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ஹிந்தியில்தான் இவரின் மார்கெட் உச்சத்தை தொட்டது. 1948 ஆம் ஆண்டு பிறந்த ஹேமமாலினி நடிகை என்பதையும் தாண்டி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.

தமிழில் முதன் முதலில் இது சத்தியம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார் ஹேமமாலினி. ஹிந்தியில் தர்மேந்திராவுடன்தான் அதிகமாக நடித்திருக்கிறார். எண்ணிலடங்கா விருதுகளை பெற்ற ஹேமமாலினி ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் கூட.

இதையும் படிங்க: அப்படி அவர் என்ன பண்ணாரு?!.. ராதாரவி ரிட்டயர்ட் ஆகுறது நல்லது!.. கிழித்தெடுத்த ஸ்ரீலேகா!..

இவர் தான் இப்போது ஒரு படத்தில் நடித்தால் என் உயிரே போய்விடும் என்று பயந்து நடிக்க மறுத்திருக்கிறார். இது பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் சில தகவல்களை கூறினார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆசிஃப் தன் படத்தில் ஹேமமாலினியை நடிக்க வைக்க கேட்டிருக்கிறார். அதை கேட்டதும் ஹேமமாலினிக்கு ஒரே ஷாக். இத்தனைக்கும் ஆசிஃப் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்தானாம்.

ஆனால் ஹேமமாலினி ஷாக்கானதுக்கு காரணம், ஆசிஃப் ஒரு ராசியில்லாத தயாரிப்பாளர் என்பதால்தானாம். ஏனெனில் ஆசிஃபுடன் முதன் முதலில் ஒரு படத்தை கூட்டாக சேர்ந்து தயாரித்த ஒருவர் அந்தப் படம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனாராம். அதே போல் முகலயாசம் என்ற படத்தில் சந்திர மோகன் என்ற நடிகரை வைத்து எடுத்துக் கொண்டிருக்க அந்த நடிகரும் அந்தப் படம் முடிவதற்குள் இறந்து போனாராம்.

இதையும் படிங்க: இந்தப் படங்களைப் பாருங்க… அப்புறம் உங்க எனர்ஜியே வேற லெவல்!.. இது மகளிர்தின ஸ்பெஷல்…

அதே போல் முகலயாசம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மதுபாலா என்ற பழம்பெரும் நடிகை. அந்த நடிகையும் இருத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாராம்.அதே போல் லைலா மஜ்னு கதையை காதலும் கடவுளும் என்ற பெயரில் ஆசிஃப் தயாரிக்க இந்தப் படத்தில் குரு தத் கதாநாயனாக நடித்தாராம். ஆனால் இந்த படம் கால்வாசி கூட எடுக்கப்படாத நிலையில் அதற்குள் குரு தத்தும் இறந்து போனாராம். இப்படிப்பட்ட சூழ் நிலையில் தான் எப்படி நடிப்பேன் என்று பயந்தே ஹேமமாலினி அவர் படத்தில் நடிக்க தயங்கினாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top