Connect with us
Ladies Special

Cinema News

இந்தப் படங்களைப் பாருங்க… அப்புறம் உங்க எனர்ஜியே வேற லெவல்!.. இது மகளிர்தின ஸ்பெஷல்…

இன்று மார்ச் 8. உலக மகளிர் தினம். எல்லாத் துறைகளிலும் இன்று பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். அதில் சினிமாவும் விதிவிலக்கல்ல. இங்குள்ள படங்களே அதற்கு சாட்சி. என்னென்ன என்று பார்ப்போமா…

சிலர் வாழ்க்கையில் எதையோ பறிகொடுத்த மாதிரி எப்போதும் சோகமயமாய் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மனதில் புதுத்தெம்பை உண்டாக்கும் வகையில் 5 படங்கள் உள்ளன. என்னென்ன என்று பார்ப்போமா…

இறுதிச்சுற்று

2016ல் வெளியான படம். படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா… படத்தின் கதை, திரைக்கதையில் புதுமையைச் செய்து படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மாதவன், ரித்திகாசிங் நடித்துள்ள அற்புதமான படம். படத்தில் ரித்திகாசிங் குத்துச்சண்டை வீராங்கனையாக எப்படி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சாதிக்கிறார் என்பதே கதை.

36 வயதினிலே

2015ல் வெளியான படம். ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கிய படம். நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். ஜோதிகா, ரகுமான், அபிராமி, இளவரசு, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். குடும்பத்திற்காக ஒரு பெண் தன்னையே தியாகம் செய்யும் கதை. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு

VKG

VKG

2009ல் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம். இந்தப் படத்தில் தான் விஷ்ணுவிஷால் அறிமுகம். அப்புக்குட்டி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் சரண்யா மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

வானமே எல்லை

1992ல் வெளியான படம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று அந்தக் காலத்தில் ஒரு விளம்பரம் வரும். அது போல எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நின்று போராடி ஜெயிக்க வேண்டும் என்ற அழுத்தமான கருத்தை சொன்ன படம். இயக்குனர் கே.பாலசசந்தரின் தன்னம்பிக்கை ஊட்டும் வெற்றிப் படைப்பு இது.

ஆனந்த் பாபு, பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், மதுபாலா, ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி. இவர் சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இன்னொரு பெயர் மரகதமணி. ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்காக இந்த விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் வரும் நடிகைகளின் நடிப்பு பாராட்டுக்குரியது.

உன்னால் முடியும் தம்பி

1988ல் வெளியான படம். இயக்குனர் சிகரத்தின் மற்றும் ஒரு வெற்றிப் படைப்பு. கமல், ஜெமினிகணேசன், சீதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் உன்னால் முடியும் தம்பி என்ற ஒரு பாடலே போதும். தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஊட்டி விடும். இந்தப் படத்தில் நாயகியாக வரும் சீதா பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகவே வருவார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top