எந்த வேடம் கொடுத்தாலும் டாப் டக்கரான இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இளவரசி தான்..!

by sankaran v |
எந்த வேடம் கொடுத்தாலும் டாப் டக்கரான இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இளவரசி தான்..!
X

Ilavarasi

அழகிய முகம், மீன்களைப் போன்ற கண்கள், குழந்தை நட்சத்திரமாக வந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பன்மொழித்திறம் பெற்றவர் இவர். அவர் தான் இளவரசி. நாட்டியத்தை முறைப்படிக் கற்றவர்.

நிலவு தூங்கும் நேரம், ஜானகி தேவி ராமனைத் தேடி, மச்சானை வச்சிக்கடி, கீதம் சங்கீதம் ஆகிய பாடல்களை நாம் கேட்டு இருப்போம். அதில் நடித்தவர் இவர் தான்.

இவரைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு இது.

1967ல் சென்னை ஜம்புசர்மா, புவனேஸ்வரி தம்பதியருக்கு மகள் மஞ்சுளா சர்மா. இவர் தான் இளவரசி. திரைத்துறையில் பிலிம் எக்சிகியூட்டிவ்வாக இருந்தார். செல்ல மகளாக வலம் வந்த இவருக்கு முறைப்படி நாட்டியம் கற்றுக்கொடுக்கப்பட்டது. கலை ஆர்வம் மிக்க இவர் எளிதாக அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே வசீகரமான தோற்றத்தால் தமிழ்த்திரை உலகம் இவரை வரவேற்றது.

வாழ்வே மாயம் படத்தில் 14வது வயதில் குழந்தை நட்சத்திரமாக லிட்டில் மஞ்சு என்ற பெயரில் அறிமுகமானார் இளவரசி. சாமிநாதன் சாஸ்திரியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகளாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் இவருக்கு வசனம் இல்லை.

ilavarsi3

கங்கை அமரன் இயக்க கொக்கரக்கோ என்ற படத்தில் அறிமுக நாயகன் மகேஷ_க்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இளவரசி என்ற பெயரில் நடித்தார். வாகன விபத்தில் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனபாதிப்பு உடையவராக நடித்தார். 1983ல் வெளியான கொக்கரக்கோ படத்தில்இளையராஜா இசையில் கீதம் சங்கீதம் என்ற பாடலில் தோன்றி ரசிகர்களை வசீகரித்தார்.

மனைவி சொல்லே மந்திரம் என்ற படத்தில் பாண்டியனின் குப்பத்து மனைவி ராணியாக நடித்தார். மெட்ராஸ் பாஷையைப் பேசினார்.

சிவாஜியுடன் தாய்க்கு ஒரு தாலாட்டு, கமலுடன் சட்டம், ராஜேஷ_டன் அலைபாயும் நெஞ்சங்கள், ஆலய தீபம், சிறை, விஜயகாந்துடன் வீட்டுக்கு ஒரு கண்ணகி, ஊழை விழிகள், மோகனுடன் 24 மணி நேரம், குங்குமச்சிமிழ், சிவகுமாருடன் குவா குவா வாத்துக்கள், நான் பாடும் பாடல், சின்னக்குயில் பாடுது, ஜீவநதி, பாக்யராஜூடன் தாவணிக்கனவுகள், விசுவுடன் அவள் சுமங்கலி தான், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்களில் நடித்தார்.

பாண்டியனுடன் மண்ணுக்கேத்த பொண்ணு, சந்திரசேகருடன் அடுத்த வீடு, ரகுவரனுடன் கூட்டுப்புழுக்கள், அர்ஜூனுடன் வேஷம், கவுண்டமணியுடன் தலையாட்டி பொம்மைகள் என்று தமிழ்த்திரைத்துறையில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார். நாயகி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.

தொடர்ந்து ராஜ்கிரணின் அரண்மனைக்கிளியில் அகானாவின் தாயாராக நடித்தார். டி.ராஜேந்தரின் சபாஷ் பாபு படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஜெயராமுடன் புதுநிலவு, பிரபுவுடன் பாஞ்சாலங்குறிச்சி, பிரசாந்துடன் ஹலோ ஆகிய படங்களிலும் நடித்தார். நான் பாடும் பாடலில் கதை, எழுத்தாளர் சிவகுமாரின் உறவினராக, நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். மச்சான வச்சிக்கடி என்ற பாடல் இந்தப்படத்தில் தான் உள்ளது.

ilavarasi2

குங்குமச்சிமிழில் மோகனை காதலித்து வீடின்றி கடலோரம் வசிப்பார். இந்தப்படத்தில் இடம்பெற்ற இவர் நடித்த நிலவு தூங்கும் நேரம் பாடல் இன்று வரை ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

தெலுங்கு படத்திலும் நடித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். கோபால் என்பவரை மணம்புரிந்தார். இல்லறத்திற்குப் பின் சினிமாவில் இருந்து விலகினார். ஸ்ரீலக்ஷனா இவரது ஒரே மகள். இவரும் சிறந்த கல்வியைக் கற்று உயர் பதவியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது இளவரசி இல்லற வாழ்வில் ஜொலித்து வருகிறார்.

Next Story