பல தடவ ட்ரை பண்ணியும் நடிக்க முடியாம போச்சே!. ரஜினியையே டீலில் விட்ட அந்த நடிகை...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று பெரும்பாலான நடிகைகள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ரஜினியின் 4 படங்களில் நடிக்க முடியாமல் போன விஷயம் தெரியவந்துள்ளது. தமிழ்ப்படங்களில் குறைவான படங்களிலே நடித்தாலும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு முத்திரை பதித்தது என்றே சொல்லலாம்.

இருவர் படத்தில் அவர் முதன்முதலாக நடித்தபோது அது தான் அவரது முதல் படம் என்பது போலவே இருக்காது. அவ்வளவு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பாலிவுட்டிலும் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். சக்திவாய்ந்த பாலிவுட் நடிகை என்றால் அந்தப் பட்டியலில் இவரும் உண்டு.

ரஜினியின் எந்தெந்தப் படங்களில் ஐஸ்வர்யாராய் நடிப்பதாக இருந்து நடிக்க முடியாமல் போனது என்று பார்ப்போம்.

முதலில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ரஜினி இணைந்து நடித்த படம் படையப்பா. இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராய்க்குத்தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் ஐஸ்வர்யா ராய்.

Enthiran

Enthiran

அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா, சந்திரமுகி, சிவாஜி தி பாஸ் ஆகிய படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன காரணத்தாலோ ஐஸ்வர்யா ராய் அவை எல்லாவற்றிலும் நடிக்காமல் இருந்துள்ளார்.

ஆனால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா பலருக்கும் வாய்ப்பு ஒரு முறை தான் கதவைத் தட்டும். ஆனால் இவருக்கு 4 முறை தட்டிய வாய்ப்பு, 5வது முறையும் தட்டியுள்ளது. அப்போது வந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

அது தான் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இந்தப் படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது. 2010ல் வெளியானது. இந்தப்படத்தின் இந்தி பெயர் ரோபோ. இந்தப்படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகவே படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதே போல சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என பல விருதுகளையும் அள்ளியது.

ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் மொஹப்பதீன், ஹம் தில் தே சுகே சனம், தூம் 2, தேவதாஸ் ஆகிய ஹிட் படங்களில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் இயக்கத்தில் இருவர், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

 

Related Articles

Next Story