மேடம் நீங்க சரக்கு அடிப்பீங்களா?!.. ஜெயலலிதா சொன்ன கூல் பதில் இதுதான்!..
அம்மா நடிகை என்பதால் சினிமாவுக்கு வந்தவர் ஜெயலலிதா. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அவருக்கு கிடைத்த அதிர்ஷம் இரண்டாவது படமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆருடன் ஜோடி போட்டு நடித்துவிட்டால் சொல்ல வேண்டுமா?.. ரசிகர்களிடம் பிரபலமானார். அதனால் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா மற்றும் சரோஜாதேவி ஆகியோருடன் மாறி மாறி நடித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரின் படங்களில் நடிப்பதை நிறுத்தினார் ஜெயலலிதா.
இதையும் படிங்க: சரோஜாதேவியிடம் சத்தியம் வாங்கிய ஜெயலலிதா!.. அட எப்படியெல்லாம் யோசிச்சிருக்காரு!..
அதன்பின் சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு எழுத்தாளராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவரை தனது அரசியல் கட்சியில் இணைத்தார் எம்.ஜி.ஆர்
அதன்பின் அசுர வேகம் எடுத்தார் ஜெயலலிதா, கொள்கைபரப்பு செயலாளர், மேல்சபை எம்.பி ஆகிய பதவிகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதனால் தேசிய அரசியலிலும் கலக்கினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவின் தலைவியாக மாறி நாட்டின் முதல்வராகவும் மாறினார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு ஆசைப்பட்ட ஜெயலலிதா!.. தள்ளி வைத்து தவிர்த்த எம்.ஜி.ஆர்!.. எழுத்தாளர் பகீர் தகவல்!..
அதன்பின் தனது சொந்த வாழ்க்கை பற்றி எந்த தகவலையும் அவர் எந்த இடத்திலும் பேசவில்லை. அதேநேரம், யார் கேள்வி கேட்டாலும் மனதில் இருப்பதை பயப்படாமல் சொல்லும் பழக்கமுடையவர் அவர். பொதுவாக திரையுலகில் உள்ளவர்களிடம் சொந்த விஷயம் பற்றி கேள்வி கேட்டால் ஒன்று கோபப்படுவார்கள் அல்லது பொய்யான பதிலை சொல்வார்கள். இதிலிருந்து மாறுபட்டவர் ஜெயலலிதா.
அவர் முதல்வராக இருந்தபோது கல்லூரி மாணவ, மாணவிகள் அவரிடம் நேர்காணல் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் அசத்தலாக பதில் சொன்னார் ஜெயலலிதா. அப்போது ஒரு மாணவி ‘உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா?’ என கேட்க, அங்கே இருந்த மற்ற மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஜெயலலிதாவோ கூலாக ‘குடிப்பழக்கம் அளவாக இருந்தால் பிரச்சனை இல்லை’ என்று சொல்லி சிரித்திருக்கிறார்.