Connect with us

Cinema History

நான்கு முக்கிய இயக்குனர்களிடம் வாய்ப்பை இழந்த நடிகர்.. இல்லன்னா அவர் லெவலே வேற!..

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளே அவர்களை பெரும் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. அதுவும் பெரிய இயக்குனர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது அந்த நடிகர்கள் எளிதாக வரவேற்பை பெறுகின்றனர்.

அதனால்தான் கெளதம் கார்த்தி, அதர்வா போன்ற நடிகர்கள் தங்களது முதல் படத்தையே மணிரத்னம், பாலா போன்ற பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தனர். எனவே கதாநாயகன் ஆவதில் இயக்குனரின் பங்கும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பெரும் எழுத்தாளரும் நடிகருமான ஜோ மல்லூரி தனது பேட்டியில் ஆரம்பக்கால சினிமா நிகழ்வுகளை பற்றி கூறும்போது, பெரும் இயக்குனர்களிடம் வாய்ப்பை இழந்த சோகத்தையும் கூறுகிறார்.

வாய்ப்புகளை இழந்த நடிகர்:

மிக சிறு வயதிலேயே சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தவர் நடிகர் ஜோ மல்லூரி. அவருக்கு முதலில் எழுத்தில்தான் ஆர்வம் இருந்தது எழுத்தாளராக இதுவரை 15க்கும் அதிகமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். ஆனால் எப்படியோ திரைத்துறையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முதன் முதலாக இயக்குனர் கே.பாலச்சந்தர் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்தார். ஆனால் பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. அதே போல பிரபல இயக்குனர் மகேந்திரன் சின்னத்திரையில் நடிகருக்காக ஆள் தேடி கொண்டிருந்தபோது ஜோ மல்லூரியை வேலைக்கு எடுத்துள்ளார்.

joe malloori

joe malloori

ஜோ மல்லூரியின் நடிப்பை கண்டு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். பிறகு அந்த வாய்ப்பும் ஜோ மல்லூரிக்கு கிடைக்காமல் போயுள்ளது. இதே போல இயக்குனர் பாக்கியராஜ், எஸ்.ஏ சந்திரசேகர் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து.

ஆனால் அவற்றையெல்லாம் அப்போது உதாசீனப்படுத்திவிட்டார் ஜோ மல்லூரி. இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறியுள்ளார். ஒருவேளை அவர்களிடம் வாய்ப்பு பெற்று நடிகராகி இருந்தால் தற்சமயம் தமிழில் பெரும் நடிகராக அவர் ஆகியிருக்க கூட வாய்ப்புண்டு.

இதையும் படிங்க: ராதாரவி என்னை அடிக்கட்டும்.. ஐ யம் வெயிட்டிங்!. காந்தராஜ் பதிலடி…

google news
Continue Reading

More in Cinema History

To Top