அஜித்தின் அறிமுக படத்தில் ஜோடி அந்த கவர்ச்சி கன்னியா?!. நல்லவேளை மனுஷன் தப்பிச்சாரு!..

80ஸ், 90ஸ் கிட்களை குஷிப்படுத்திய நடிகைகளில் ஒருவர் ஜோதிமீனா. அஜீத் உடன் நான் தான் அந்தப் படத்தில் ஹீரோயின் என்கிறார். ஆச்சரியமா இருக்கா... என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
எனக்கு சினிமாவுல முதல் வாய்ப்பே டான்ஸ். அதுவும் ஜோதிலட்சுமியின் மகள் என்றதும் பயம் அதிகமாகவே இருந்தது. அவங்களும் கூடவே இருக்காங்க. எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அது ரத்தத்திலேயே இருக்கு. நான் கலா மாஸ்டரிடம் தான் டான்ஸ் கத்துக்கிட்டேன். நான், சங்கவி, ஷகிலா எல்லாரும் ஒண்ணா தான் கத்துக்கிட்டோம். அமராவதி படத்துல ஹீரோயினா நடிக்க முதல்ல என்னைத் தான் கேட்டாங்க. ஹீரோயின்னு சொன்னதும் வேண்டாம்னுட்டேன்.
அப்போ அஜீத்தை நான் பார்க்கவே இல்லை. அதனால ஹீரோயினா நடிக்கிற வேஷமும் எனக்கு அப்போ பெரிதாகத் தெரியல. எல்லாமே டான்ஸ்னு தான் இருந்தேன். நான் மிஸ் பண்ண சான்ஸ்ல அதுவும் ஒண்ணு.

Amaravathi
விஜய் அரசியலுக்கு வர்றது அவரோட தனிப்பட்ட கருத்து. அவரு மக்களுக்கு நல்லது பண்ணனும்னா பண்ணலாமே என்கிறார் நடிகை ஜோதிமீனா. சினிமாவுல நடிக்க ஸ்கோப் இல்லாததால் தான் அரசியலுக்கு வர்றாங்கன்னு சொல்றதுலாம் இல்ல. விஜய் இன்னும் பீட்ல தான இருக்காரு. கலைஞரோட வசனம் எழுதிய படத்துல நடிக்கணும்னு ஆசை. கமல், ரஜினி படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு வரலையேன்னு பீல் பண்றேன் என்கிறார் ஜோதிமீனா.
கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஜோதிமீனா. இவர் உள்ளத்தை அள்ளித் தா, அழகான நாட்கள், ரகசிய போலீஸ், கோபாலா கோபாலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். குத்தாட்டப் பாடல்கள் என்றாலே இவர் தான் என்று இருந்த காலமும் உண்டு.

Jothi meena, Ajith
முதல் பட வாய்ப்பைத் தவற விட்ட இவர், அதன்பிறகு அஜீத்தின் நேசம் படத்தில் குத்தாட்டம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாருடன் நேதாஜி படத்திலும், பார்த்திபனுடன் வாய்மையே வெல்லும் படத்திலும், விஜயுடன் மாண்புமிகு மாணவன் படத்திலும் ஜோதிமீனா நடித்துள்ளார்.