அட என்னப் போல யார் மச்சான்? சைலண்டா இருந்து கப்-அ கவ்விய காஜல் அகர்வால் - என்ன மேட்டர் தெரியுமா
Actress Kajal Agarwal: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்திதான் இவர் சினிமா அறிமுகம் என்றாலும் தமிழில் முதன் முதலாக ‘பழனி’ என்ற திரைப்படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு இந்த சினிமா துறைக்குள் வந்தார் காஜல் அகர்வால்.
ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கு போன்ற மற்ற மொழி சினிமாப் படங்களில் நடித்தாலும் எந்த படமும் சரியாக ஓடவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டு வெளியான மகதீரா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் வேட்டையை நடத்தியது.
இதையும் படிங்க: விஜயகாந்த் எப்பையுமே தர்மர் தான்… சம்பளத்தை கூட கண்டுக்க மாட்டார்.. டைரக்டர் சொன்ன ஆச்சரிய தகவல்..!
அதிலிருந்தே காஜல் அகர்வாலின் புகழ் பெருக தொடங்கியது. தொடர்ந்து தமிழிலும் பல படங்களில் நடித்து ஒரு புகழ்பெற்ற நடிகையாக மாறினார். தொடர்ந்து விஜயுடன் மூன்று படங்களில் நடித்து அந்த மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்த நாளான டிசம்பர் 20 ஆம் தேதியை அவரது ரசிககர்கள் ‘World Kajalism Day’ என்ற பெயரில் வருடம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். அந்த நாளின் போது பல மாநிலங்களில் இருக்கும் ரசிகர்கள் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், இல்லாதோர் என இவர்களுக்கு வயிறார சாப்பாடு கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: எம்எஸ்வி-யே திருப்பி அனுப்பிய பாட்டை சூப்பர் ஹிட் ஆக்கிய இசைப்புயல் – வைரமுத்து பகிர்ந்த சீக்ரெட்
பல நல்ல உதவிகளையும் செய்து வருகின்றனர். வேறெந்த நடிகைக்கும் இந்தளவு பெருமையை ரசிகர்கள் கொடுத்ததில்லை. அந்தளவு காஜல் அகர்வால் மீது ரசிகர்கள் வெறித்தனமான பாசத்தையும் அன்பையும் வைத்திருக்கின்றனர். அதற்கான காரணங்கள் பல இருந்தும் முக்கியமான காரணங்களாக காஜலின் நடிப்பு அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
தென்னிந்திய நடிகைகளிலேயே காஜல் அகர்வாலுக்குத்தான் சிங்கப்பூரில் இருக்கும் மேடம் துசாட்ஸ் கண்காட்சியில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அவருடைய அழகு. தன்னுடைய வெளிப்படையான கண்கள், அழியாத அழகு என தென்னிந்திய நடிகைகளில் ஈடு இணையற்ற திறமை மற்றும் அழகுடன் இருக்கும் நடிகை காஜல்.
அடுத்ததாக அவருடைய ஸ்டைலிஷ். அவரது அழகான உடைகள் மூலம் ரசிகர்களை வெகு எளிதாக கவரக்கூடியவர் காஜல். கேரக்டரையும் தாண்டி தன்னுடைய தன்னுடைய ஃபேஷனில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர் காஜல். எல்லாவற்றையும் தாண்டி அவர் செய்யும் பல நல்ல தொண்டுகள் ரசிகர்களிடம் அவர் மீது அலாதி மரியாதை வைக்க உதவியது.
இதையும் படிங்க: அடுத்த வருஷம் ராகவா லாரன்ஸுக்கு செம ட்ரீட் தான் போலயே.. எல்லாமே மாஸ் டைரக்டர்கள்..!