எப்பா ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சுட்டாங்க! கரகாட்டக்காரன் கனகாவா இது? வைரலாகும் புகைப்படம்

by Rohini |   ( Updated:2023-11-26 23:19:27  )
kanaga
X

kanaga

Actress Kanaga: 80களில் கொடிகட்டி பறந்த நடிகையாக கனகா அறியப்பட்டார். அதிலும் கரகாட்டக்காரன் படத்தின் புகழ் அவரை எங்கேயோ கொண்டு சென்றது. பெரும்பாலும் ரெட்டை ஜடையில் வலம் வரும் கனகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் சமீபகாலமாக கனகாவை பற்றி எந்தவொரு செய்தியும் தெரியாமல் இருந்தது. ஒரு சமயம் கங்கை அமரனே ஒரு பத்திரிக்கையில் கனகாவை பற்றி உருக்கமாக பேசியிருந்தார். நீ எப்பொழுது வெளியே வருவாய் என்றும் உனக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சுதா கொங்கராவுக்கு கதை எழுதவே தெரியாது!.. அவங்களே சொன்ன விஷயம்.. அப்போ அந்த 2 படங்கள் எழுதியது யாரு?

அந்தளவுக்கு அவர் வீட்டில் தனிமையில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகின. பால்பாக்கெட் மட்டும் எடுக்க வெளியே வருவதாகவும் அதன் பிறகு அவர் பொது இடங்களில் செல்ல மறுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

kanaga

kanaga

அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டில் இருந்த பல மதிப்புமிக்க பொருட்கள் தீயில் எரிந்ததாக தகவல்கள் வெளிவந்தன. சென்னை ஆர்.கே.புரம் பகுதியில் கனகாவின் வீடு உள்ளது. அவரது வீடு நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் உள்ளதாகவும் வீட்டின் மெயின் கேட் பல வருடங்களாக வர்ணம் பூசப்படாதது போல் இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதையும் படிங்க: ஞானவேல் ராஜா மீது கோபத்தில் சுதா கொங்கரா!.. மொத்த இமேஜை இப்படி சல்லி சல்லியா உடைச்சிப்புட்டாரே!..

இந்த செய்திகள் வெளிவந்ததில் இருந்தே எப்போது கனகா வெளியே வருவார் என்றும் அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மனதில் எழத் தொடங்கியது. இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி கனகாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் கனகா மிகவும் குண்டான உடலமைப்புடன் தெரிகிறார். ஆனால் பார்க்க ஆளே மாறிப் போய்தான் காணப்படுகிறார் கனகா.

இதையும் படிங்க: அசோகன் காதல் திருமணத்தில் இவ்வளவு பிரச்சினை இருந்ததா? எம்ஜிஆர், ஜெய்சங்கர் செய்த உதவி என்ன தெரியுமா?

Next Story