Categories: Cinema News latest news

பல மணி நேரம் காத்திருப்புக்கு பின்னாடி கனகாவை சந்தித்த குட்டிபத்மினி! நடிகை சொன்ன பகீர் தகவல்

Actress Kanaga: 80களின் இறுதியில் தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பாலும் கிராமத்து வாசனை கலந்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கனகா. ரஜினி, ராமராஜன், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகைதான் கனகா.

ஒரு கட்டத்திற்கு பிறகு இவரை சினிமாவில் பார்க்க முடிவதில்லை. இவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் இவர் ஒரு பாலடைந்த அவரது பழைய வீட்டில் தனியாக வசிப்பதாகவும் யாரையும் சந்திக்க விருப்ப இல்லாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: காக்க வச்சி அல்வா கொடுத்த கமல்!.. அந்த ஹீரோ பக்கம் போன ஹெச்.வினோத்.. இதெல்லாம் நியாயமா?..

அவருடைய அன்றாட தேவைகளுக்கு மட்டுமே கனகா வெளியே வருவதாகவும் மற்ற நேரங்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கனகா  நடிகை குட்டி பத்மினியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அந்த புகைப்படம் வெளியான ஒரு சில நிமிடங்களில் ரசிகர்கள் அனைவரும் அதை தன் நண்பர்களுக்கும் பகிரத்தொடங்கினார்கள். அந்தளவுக்கு கனகாவை பற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாகத்தான் இருந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அதிரிபுதிரியாக வந்த மன்னிப்பு கடிதம்! ஒரே ஒரு அறிக்கையால் ஆடிப்போன சிவக்குமார் குடும்பம்

இந்த நிலையில் குட்டிபத்மினி தன்னுடைய இணையதள பக்கத்தில் கனகாவை சந்தித்த போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். குட்டி பத்மினி கனகா வீட்டிற்கு போன போது கனகாவின் வீட்டு பூட்டிக் கிடந்ததாம்.

அதன் பிறகு சில மணி நேரம் அங்கேயே குட்டி பத்மினி காத்துக் கொண்டிருந்தாராம். அதனை அடுத்து ஒரு ஆட்டோவில் கனகா வந்து இறங்கினாராம். குட்டி பத்மினியை பார்த்ததும் கனகா ஓடி வந்து ‘அக்கா எப்படி இருக்கீங்க? உங்கள எப்படி மறக்க முடியும்?’ என கேட்டுக் கொண்டே கட்டியணைத்துக் கொண்டாராம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்த்ததும் கணித்த பானுமதி.. அவர் சொன்ன ஜோசியமும் அப்படியே பலிச்சிடுச்சே!..

அதன் பிறகு இருவரும் அருகே இருந்த ஒரு காஃபி ஷாப்பிற்கு சென்று காஃபி குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது கனகா ‘என் அப்பா தொடர்ந்த எல்லா கேஸ்களும் ஓரளவு முடிவடைந்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன். மேலும் இந்த வாழ்க்கை எனக்கு யாரையும் நம்பக் கூடாது என கற்றுக் கொடுத்துவிட்டது’ என்று குட்டி பத்மினியிடம் கனகா கூறினாராம்.

Published by
Rohini