Connect with us
actress kavitha

Cinema History

சினிமாவே வேணாம்னு நினைச்ச கவிதா… ஆனா கொக்கி போட்டு தூக்கிய இயக்குனர்…

Actress Kavitha: தமிழ் சினிமாவில் தனது இளம் வயது முதலே சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை கவிதா. ஓ மஞ்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பள்ளி படிப்பை கூட முடிக்காத இவர் சினிமாவிற்குள் நுழைய இவரது தாயே காரணம் என கூறியுள்ளார்.

இவர் சினிமாவில் கதாநாயகியாகவும், வில்லியாகவும், பல ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் மேலும் ரட்சகன், பாண்டவர் பூமி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படமான ஓ மஞ்சு திரைப்படத்தில் நடிக்க 16 வயது பெண்ணை தேடியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.

இதையும் வாசிங்க:உனக்குலாம் அது செட் ஆகாது!.. ஆசையா கேட்ட மோகனுக்கு பல்பு கொடுத்த இயக்குனர் சுந்தர்ராஜன்!…

அப்போது ஸ்ரீதரின் உதவியாளர் ஒருவர் கண்ணில் கவிதா பட்டுள்ளார். உடனே அவர் கவிதாவின் அம்மாவிடம் சின்ன வாணிஸ்ரீ மாதிரி கவிதா இருப்பதாகவும் அவரை சினிமாவில் நடிக்க அனுப்பக்கோரியும் கேட்டுள்ளார். உடனே கவிதாவின் தந்தை இவள் வாணிஸ்ரீ மாதிரி இருக்காளா என கிண்டலடித்துள்ளார்.

பின் ஒரு வழியாக இவரை ஆடிஷனுக்கு அவரது தாய் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு இருந்தவர்களை பார்த்துவிட்டு இவருக்கு பயமாகிவிட்டதாம். உடனே நான் சினிமாவிலே நடிக்கவே மாட்டேன் என அவரது தாயிடம் கூறிவிட்டாராம்.

இதையும் வாசிங்க:மொத்த தில்லுமுல்லுக்கும் காரணமே இவர்தானா!… அமீர் விஷயத்தில் விளையாடிய பிரபலம்…

பின் ஆடிஷனுக்கு பின் அவர் ஒரு வழியாக அப்படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாததை தனது தாயிடம் கூறியுள்ளார். நான் படிக்க வேண்டும் என அவரிடம் கூறியுள்ளார். அப்போது அவரது தாய் கவிதாவின் கைகளை பிடித்து கொண்டு மிகவும் அழுதுள்ளார்.

உனது கையை உனது காலாய் நினைத்து கொள்கிறேன். நீ இந்த படத்தில் நட. இதில் நீ வாங்கும் சம்பளம் நமது வீட்டிற்கு மிகவும் முக்கியம். அடுத்த பட வாய்ப்பு உனக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை… ஆனால் இப்படத்தில் கண்டிப்பாக நடிக்க கோரி அவரிடம் புலம்பியுள்ளார். மனம் கேட்காமல் கவிதாவும் அப்படத்தில் நடித்துள்ளார். பின் இவருக்கு அடித்தடுத்து பல படவாய்ப்புகள் வந்தன.

இதையும் வாசிங்க:கண்ணதாசன் ஏதோ உளரார்னு நினைச்சேன்!.. ஆனா அது சாகாவரம் பெற்ற பாடல்!.. உருகும் பிரபலம்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top