Actress Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் இது என்ன மாயம் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் ரஜினி முருகன், ரெமோ, பைரவா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் இவரது பல திரைப்படங்களுக்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. பின் இவர் சர்க்கார், பென்குயின், அண்ணாத்தே போன்ற திரைப்படங்கள் இவருக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே உருவாக்கின. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மாமன்னன். இப்படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
இதையும் வாசிங்க:உண்மையிலேயே கர்ணனாகவே மாறிய தனுஷ்! இரவு பகல் பார்க்காமல் அண்ணனுக்காக துணிந்து இறங்கிய சம்பவம்
இவர் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரகு தாதா, ரிவால்வர் டீட்டா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள நகை கடை ஒன்றை திறந்த வைக்க வந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் பலர் இவரிடம் பல கேள்விகளை எழுப்பினர்.
அப்போது வரலாற்று சம்பந்தமான கதைகளில் நடிக்க தயாரா? என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க அதற்கு கீர்த்தி சுரேஷ் அப்படிப்பட்ட கதைகளில் நடித்தால் அதிலிருந்து வெளிவரவே மிக அதிக நாட்கள் தேவைப்படுகிறது. எனவே அவ்வாறு கதைகள் வந்தால் அதில் நடிப்பதா என்பதை பற்றி யோசித்துதான் கூற வேண்டும் என பதிலளித்தார்.
இதையும் வாசிங்க:கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க மன்சூர் அலிகான் செஞ்ச வேலை!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..
பின் மற்றொரு பத்திரிக்கையாளர் லியோ திரைபடத்தினை பற்றிய கருத்தினை கேட்டதற்கு கடுப்பான கீர்த்தி சுரேஷ், நான் இங்கு கடை திறப்பு விழாவிற்கு வந்துள்ளேன். என்னிடம் அதை பற்றி கேட்காதீர்கள். எதிர்பார்க்கும் படமாக இருந்தால் அது நன்றாகதான் இருக்கும் என பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும் ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் அப்படத்தின் கதாபாத்திரங்களே தீர்மானிக்கும் எனவும் கூறினார்.
இதையும் வாசிங்க:குலாப் ஜாமூன் கொடுத்து மன்சூரை கரெக்ட் பண்ண நினைச்ச நடிகர்!.. கடைசில பல்பு வாங்கினதுதான் மிச்சம்..