கீர்த்தியை மேடையில் பாராட்டிய கமல்! அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தியின் தாயாரான மேனகா ரஜினியின் நெற்றிக்கண் படத்தில் ஜோடியாக நடித்தவர். அதேபோல அவருடைய அப்பாவான சுரேஷ் பிரபல தயாரிப்பாளர். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷை அறிமுகப்படுத்தியவர் பிரியதர்ஷன்.
பிரியதர்சனிடம் உதவியாளராக இருந்தவர் தான் ஏ எல் விஜய். அவர்தான் கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தியை தமிழ் மக்களிடம் அழகாக கொண்டு போய் சேர்த்தது.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்தார். கமர்சியலான அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததோடு கீர்த்தியை மிகப்பெரிய இடத்திற்கும் கொண்டு போய் சேர்த்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு நிலையான இடத்தை அடைந்தார் கீர்த்தி சுரேஷ்.
திடீரென்று தனுஷ் உடன் நடித்த தொடரி படம் அவருக்கு ஒரு இறங்கு முகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு பாலிவுட் நடிகைகளை போல தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி எலும்பும் தோலுமாக வந்து நின்றார் கீர்த்தி. ஆனால் அதை ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு எந்த விதத்திலும் கீர்த்தி கவலைப்பட்டதும் இல்லை.
இதையும் படிங்க : ஒரே பேர்ல இத்தன திரைப்படமா..? – ஆனா நடிச்சது வேறு வேறு ஆளு யார், யாருன்னு தெரியுமா?
இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கையை தன்னுடைய போக்கிலேயே கொண்டு போன கீர்த்திக்கு மகாநடி என்ற ஒரு படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தேசிய விருதையும் பெற்று தந்தது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி. இந்த நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல் கீர்த்தியை மனதார பாராட்டி இருப்பார்.
இதுவரை கமல் எந்த நடிகையையும் இந்த மாதிரி பாராட்டியது இல்லை. அதாவது புத்திசாலியான பெண், அறிவுமிக்க பெண், அழகு மட்டும் இருந்தால் போதாது கூட அறிவும் இருக்க வேண்டும். அது கீர்த்திக்கு நிறையவே இருக்கின்றது என பாராட்டி இருப்பார். அதற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
அதாவது கீர்த்தி இயல்பாகவே ஒரு கவிஞராம். மலையாளத்தில் பல கவிதைகளை எழுதி இருக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் புத்தகங்களை நாள்தோறும் படிக்க கூடியவராம். சிறுகதை நாவல் என தன்னுடைய பொழுதுபோக்கை புத்தகங்களில் கழிப்பவராம். படப்பிடிப்பிற்கு இடையில் கூட புத்தகங்களை தான் வாசிப்பாராம்.
இதையும் படிங்க : என்னது… நடிகர் திலகத்தை வைத்து நடிகையர் திலகம் சாவித்திரி படம் இயக்கினாரா? – ஆத்தாடி உண்மையா..!
இந்த ஒரு பழக்கம் அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதாவிற்கு இருந்தது. அதே பழக்கத்தை இப்போது கீர்த்தி சுரேஷ் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். இதை ஒரு வேளை கமல் அறிந்திருப்பார். அதனாலயே மேடையில் அவரை பாராட்டி இருப்பார் என செய்யாறு பாலு கூறினார்.