தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாக கருதப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். எதார்த்தமான நடிப்பையும் குறும்புத்தனமான முக பாவனைகளையும் காட்டி ரசிகர்களிடையே ஒரு மகத்தான வரவேற்பை பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
எப்பவும் போல ஹீரோவுக்கு ஜோடியாகவே நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி திடீரென நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்தார். அந்த ஒரு வாய்ப்பு அவரை பெருமை மிகு நடிகையாக பார்க்கப்பட்டது. அப்படியே பார்ப்பதற்கு சாவித்ரியை பிரதிபலித்தார் கீர்த்தி சுரேஷ்.
இதையும் படிங்க : கார்த்தி பட ஹீரோயினை தட்டி தூக்கிய சூர்யா!.. அடுத்த படத்துல அவங்கதான் ஹீரோயினாம்!..
அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் தட்டிச்சென்றார். அந்தப் படத்தின் விளைவு பெரும்பாலும் ஹீரோயின் சென்ரிக் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கூட அவருக்கு வேலை இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் கோலோச்சி வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஜெயம் ரவியுடன் சைரன் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது போக ரிவால்வர் ரீட்டா, ரகு தாதா, கன்னிவெடி, போன்ற படங்களிலும் நடிக்கிறார்.
இதையும் படிங்க : காவாலா பாட்டுல இத நீ தான பண்ண… நெல்சனை கலாய்த்த ரெட்டின் கிங்ஸ்லி..!
சைரன் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் எல்லாமே ஹீரோயின் சென்ரிக் படங்களாகும். இந்த நிலையில் மற்றுமொரு தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். நாக சைதன்யாவுடன் ஜோடி சேரும் கீர்த்தி அந்தப் படத்தில் ஒரு மீனவப் பெண்ணாக நடிக்கிறாராம்.
அதற்காக ஒரு வார காலம் மீனவக் குடும்பத்திலேயே தங்கியிருந்து அவர்களின் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து தனது கேரக்டருக்காக தன்னை மெருகேற்றி வருகிறாராம்.