Categories: latest news

மாப்பிள்ளை ரெடி.. பேக்கப்புக்கு ரெடி! திடீர் குண்டை தூக்கிப் போட்ட கிரண்.. இதுதான் மேட்டரா?

Actress Kiran: கோவாவில் தனியாக தன் இஷ்டம் போல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். சமீபகாலமாக சமூக வலைதளங்கள் கிரணையே குறி வைத்து ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகப்பட்ட சேனல்கள் அவரை பேட்டி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகீலாவும் கிரணை கோவாவிற்கு சென்றே பேட்டி எடுத்திருக்கிறார்.

இருவரும் பேசியதில் பல சுவாரஸ்யமான தகவல்களை கிரண் கூறியிருக்கிறார். ஜெமினி என்ற ஒரு படம் போதும் கிரணின் புகழைக் கூறுவதற்கு. அந்தப் படத்தில் பப்ளியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் பதிந்தார் கிரண். முதல் படமே பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி பெற அடுத்தடுத்து முன்னனி ஹீரோக்களுக்கு ஜோடியானார். பிரசாந்த், அஜித், விஜயகாந்த், கமல் என டாப் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படிங்க: எல்லா கலெக்‌ஷனும் ஒரே இடத்தில்!. மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடுவோம்!. சீரியல் நடிகை செய்த ஷாப்பிங்..

அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். ஆனால் திடீரென சினிமாவிற்கு பிரேக் கொடுத்து காணாமல் போனார் கிரண். அதன் பிறகு அவருடைய லைஃப் ஸ்டைலே முழுவதுமாக மாறியது. கவர்ச்சியில்லாமல் கிரணால் இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்கு மாறினார். சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார் கிரண்.

ஜெய்ப்பூரை பூர்வீகமாக கொண்ட கிரண் இப்போது கோவாவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு பீஜ்ஜில் இருப்பது மிகவும் பிடிக்குமாம். அதனால் கோவாவிலேயே செட்டிலாகி விட்டேன் என கூறினார். மேலும் திருமணம் பற்றி பேசிய கிரண் என்னுடைய வேலை, கெரியர் எல்லாம் முடிந்த பிறகு இந்த வருடம் எப்படியாவது திருமணம் செய்வேன் என்றும் அது வெளிநாட்டு மாப்பிள்ளைதான் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: மினிஸ்டர் வந்து பாக்கியா ரெஸ்டாரெண்டை திறந்தாச்சுப்பா… பல்ப் வாங்கிய கோபி!…

வெளி நாட்டில் செட்டிலாக வேண்டும் என நினைத்திருக்கிறாராம். அதனால் வெளி நாட்டு மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய இருக்கிறேன் என கிரண் கூறியிருப்பதை பார்க்கும் போது ஏற்கனவே மாப்பிள்ளையை தேடி பிடித்து விட்டார் என்றே தோன்றுகிறது.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago