Connect with us

Cinema News

மினிஸ்டர் வந்து பாக்கியா ரெஸ்டாரெண்டை திறந்தாச்சுப்பா… பல்ப் வாங்கிய கோபி!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மினிஸ்டர் வந்துவிட நல்ல நேரம் முடிவதற்குள் ரிப்பனை கட் செய்ய சொல்கிறார். இதை தொடர்ந்து கோபி உச்சக்கட்ட கடுப்பில் அங்கிருந்து சென்று விடுகிறார். பின்னர் உள்ளே சென்று எல்லாரும் விளக்கு ஏற்றுகின்றனர். பாக்கியா மினிஸ்டருக்கு நன்றி சொல்லுகிறார். அதை தொடர்ந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர்.

ஜெனி சாப்பிட்டுக்கிட்டு இருக்க செழியனை அவரை திரும்பி திரும்பி பார்த்து இருக்கிறார். இதை தொடர்ந்து இனியா அண்ணா இத்தனை டைம் பார்க்குறாரு. நீங்களும் பாருங்க எனக் கேட்கிறார். இதை தொடர்ந்து அமிர்தா வாயை மூடிக்கொண்டு சாப்பிடு எனக் கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நிவேதா பெத்துராஜ் விவகாரம்.. இப்போ எங்க போச்சு நடிகர் சங்கம்? பொங்கி எழும் பிரபலம்

அதையடுத்து, மினிஸ்டர் நம்ம ரெஸ்டாரெண்ட் பற்றி போட்டு இருக்காங்க என சந்தோஷமாக எழில் கூறுகிறார். அந்த போஸ்ட்டை பார்க்கும் போது ஜெனி மற்றும் செழியன் மோதிக்கொள்கின்றனர். இருந்தும் அமைதியாக நகர்ந்து விடுகின்றனர். அதையடுத்து ஜெனி வீட்டுக்கு கிளம்புகிறேன் என்கிறார்.

ஈஸ்வரி என் பேரப்பிள்ளையை கொஞ்ச கூட முடியலை எனத் தவிப்பாக சொல்கிறார். அதையடுத்து எழில் கேப் கிடைக்கவில்லை என்கிறார். இதையடுத்து, ராமமூர்த்தி செழியனை அழைத்துக்கிட்டு போய் விட்டு வா என்கிறார். வேண்டாம் டேடி எதுவும் சொல்லுவாங்க எனக் கூற எல்லாரும் வற்புறுத்தி அனுப்பி வைக்கின்றனர். அதையடுத்து ஜெனி காரில் ஏறி வீட்டுக்கு கிளம்புகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: என்ன மச்சான்ஸ் ரெடியா? சின்னத்திரை மூலமாக கம்பேக் கொடுக்கப் போகும் நமீதா.. எப்படி மாறீட்டாங்க

google news
Continue Reading

More in Cinema News

To Top