கவுண்டமணி, வடிவேலுவால் கூட தொட முடியாத சாதனை.. அசால்ட்டா பண்ணும் நடிகர்! கோவை சரளா பகிர்ந்த சீக்ரெட்

Actress Kovai Sarala: தமிழ் சினிமாவில் காமெடியில் நடிகர்களை விட நடிகைகளுக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை நகைச்சுவையில் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மனோரமா .

அவருக்கு பதில் அதே மாதிரியான ஒரு புகழையும் சாதனையையும் பெற்ற நடிகையாக 80, 90களில் மற்றும் இப்போது வரை அந்த ஒரு சாதனையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை கோவை சரளா. இவர் நடிக்க வந்த புதிதிலேயே மிகவும் வயதான தோற்றத்தில் நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது அவருக்கு வயது 16 தான்.

இதையும் படிங்க: சொல்றத மட்டும் செய்! வாய கொடுத்து மாட்டிக்கிட்ட அஜித்.. கோபத்தில் கத்திய இயக்குனர்

அந்த வயதிலேயே 60 வயது கெட்டப்பில் நடித்து எல்லோருக்கும் ஒரு ஷாக் கொடுத்தார். தமிழில் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் என நகைச்சுவையில் ஜாம்பவான்களாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த கோவை சரளா இப்போது தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் காமெடியில் பட்டையை கிளப்பும் நடிகராக இன்றுவரை திகழ்ந்து வருபவர் நடிகர் பிரம்மானந்தம்.

இவர் கவுண்டமணி காலத்தில் இருந்து நடித்துக் கொண்டிருப்பவர். கோலிவுட்டில் பார்க்கும் பொழுது 80களில் கவுண்டமணி செந்தில் ,90 களுக்கு பிறகு வடிவேலு விவேக் என அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். தெலுங்கில் பிரம்மானந்தத்தை பொருத்தவரைக்கும் அப்போதிலிருந்து இப்போது வரை அவர் ஒரே நாளாக இன்று வரை காமெடியில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருக்கிறார் .

இதையும் படிங்க: எம்.எஸ்.வி.யை காப்பி அடித்தாரா இளையராஜா? இசையில் எவ்வளவு சேட்டைன்னு பாருங்க…!

இதைப்பற்றி நடிகை கோவை சரளா ஒரு பேட்டியில் கூறும்போது ‘பிரம்மானந்தத்துடன் பழகுவது மிக எளிது. அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். அவரைப் போல் ஒரு ஸ்டாண்டிங் காமெடியன் இன்றுவரை யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு ஸ்டேஜுக்கு பிறகு ஒரு சில காமெடி நடிகர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள்.

bramma

bramma

ஆனால் பிரம்மானந்தத்தை பொறுத்த வரைக்கும் கவுண்டமணி காலத்திலிருந்து இன்னமும் அவர் காமெடியில் ஜொலித்துக் கொண்டு வருகிறார் .அவரை மாதிரி ஒரு லெஜென்ட் சினிமா துறைக்கு கிடைத்தது ஒரு பாக்கியம்’ என கோவை சரளா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இவர் சொன்னதை போல சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் கூட பிரம்மானந்தம் ஒரு காமெடி பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த பட டைட்டில சொன்ன விஜய் ஆண்டனி.. ஆள விடுங்கடா சாமினு ஓடிய தயாரிப்பாளர்

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it