Cinema News
வடிவேலுவை அடிச்சேன்! என் வாய்ப்பே போச்சு – மனம் வருந்தி பேசிய தனுஷ் பட நடிகை
Actress Kumtaj: தமிழ் சினிமாவில் ஐட்டம் நடனத்துக்கு என்றே ஆரம்பகாலத்தில் பல நடிகைகள் இருந்தனர். ஆனால் சமீபகால படங்களில் அப்படி ஒரு வரைமுறையே இல்லை. சொல்லப்போனால் பாடல்கள் இல்லாமலேயே படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
படம் முழுக்க வன்முறை, கொலை, கொள்ளை என இருக்க இதில் எங்கு ஐட்டம் பாடலுக்கு நேரம் ஒதுக்குவார்கள். அந்த மாதிரி ஐட்டம் பாடல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கும்தாஜ். பிரீத்தி என்ற பெயரை தன் பெயராக கொண்ட கும்தாஜ் சினிமாவிற்காக இந்த பெயரை வைத்துக் கொண்டாராம்.
இதையும் படிங்க: உருட்டு உருட்டு!.. கேப்டன் மில்லர் வசூலை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் வரும் ‘ நெருப்புக் கூத்தடிக்குது’ பாடல் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் கும்தாஜ். அந்த ஒரு பாடலால் கும்தாஜ் மிகவும் பிரபலமானார். அதிலிருந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்ததாம்.
எஸ்.ஏ.சி கூட ஒரு படத்தில் நடிக்க கும்தாஜை அழைக்க உயரத்தை கருத்தில் கொண்டு கும்தாஜை வேண்டாம் என ஒதுக்கி விட்டார்களாம். அதன் பிறகு வடிவேலுவுடன் ஜெயம் ரவி படமான ‘தாஸ்’ படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார் கும்தாஜ்.
இதையும் படிங்க: என்னையே வாடா கலாய்க்கிறீங்க? அந்த விஷயமே வேண்டாம்!… தலைவர்171 படத்தில் யூடர்ன் போட்ட ரஜினிகாந்த்!…
அதாவது பாத்ரூமில் க்ளீன் செய்ய போகும் போது கும்தாஜை பின் தொடர்ந்து வடிவேலு செல்வதும் அவரது இடுப்பை வடிவேலு கிள்ளுவதும் அதன் பிறகு வடிவேலுவை போட்டு கும்தாஜ் அடி அடி என அடிப்பதும் பார்க்கிறவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்திருப்பார். அந்த காட்சியில் உண்மையிலேயே வடிவேலுவை போட்டு கும்தாஜ் அடித்து விட்டாராம்.
அதற்கு வடிவேலு ஐய்யோ போதும்மா நிறுத்தும்மா என சொன்னாராம். மேலும் ஐட்டம் பாடலுக்கு ஆடியதாலேயே கேரக்டர் ரோலில் நடிக்க கூட வாய்ப்பு வரவில்லை என்றும் சீரியலில் வாய்ப்பு கேட்டாலும் ஐட்டம் பாடலுக்கு ஆடியவரா? என கேட்டு மறுத்துவிடுகின்றனர் என்றும் கும்தாஜ் கூறினார்.
இதையும் படிங்க: கல்யாணம் பண்ணியாச்சு! அப்புறம் என்ன அதுதானே.. உற்சாகத்தில் ஹன்சிகா! வைரலாகும் வீடியோ
பாட்டி துணையுடனேயே வாழ்ந்து வந்த கும்தாஜ் இப்போது பாட்டி மறைவிற்கு பிறகு தனியாகத்தான் வாழ்ந்து வருகிறாராம். வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் கும்தாஜ் மீது இந்த சினிமா பார்வை படாதா?