தொட்டதுக்கே இந்த தண்டனையா? குஷ்பூ மாதிரி இருங்க.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

by Rohini |
kushboo
X

kushboo

Actress Kushboo: தற்போது சினிமா துறையில் பாலியல் ரீதியான சம்பவங்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு ஆரம்ப புள்ளி போட்டது மலையாள சினிமா தான். ஆனால் அதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து எத்தனையோ துணை நடிகைகள் நடிகைகள் என பலபேர் கூறி வந்தாலும் பாலியல் தொடர்பாக இந்த அளவுக்கு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என பொங்கி எழுந்தது மலையாள சினிமாவில் தான்.

அதனால் அங்கு ஹேமா கமிட்டி என்ற ஒரு கமிட்டியை ஆரம்பித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் பல நடிகர்கள் சிக்கி உள்ளனர். முழு அறிக்கை வெளி வந்தால்தான் இன்னும் இந்த பிரச்சனையில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்பது தெரியவரும். இந்த கமிட்டி தாக்கம் தமிழ் சினிமாவிலும் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:தக் லைஃப் கையில் தான் இந்தியன் 3ன் ரிலீஸ்… இது செம கிளாஷா இருக்கே..!

தமிழ் சினிமா நடிகர்களும் கூடிய சீக்கிரம் மாட்டுவார்கள் என்று மறைமுகமாக நடிகைகள் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா குஷ்பூ என பல நடிகைகள் வாய் திறந்து இருக்கிறார்கள். ராதிகா பேசிய ஒரு பேச்சு பெரும் வைரலானது. மலையாள சினிமாவில் கேரவனில் கேமரா பொருத்தி இருப்பதை நானே பார்த்திருக்கிறேன் என கூறியது பெரும் பேசும் பொருளாக மாறியது.

ஆனால் அவர் சொல்வதை பார்த்தால் அந்த மாதிரி டெக்னாலஜி அந்த காலத்தில் இல்லையே. அப்படி இருக்கும்போது ராதிகா எப்படி இந்த மாதிரி கூறியிருந்தார் என்ற விதத்திலும் யோசிக்க வைத்தது. ஒருவேளை அவர் கூறியது சமீபத்தில் நடந்ததாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது தன்னை பற்றி ஒரு சில மீடியாக்கள் தவறாக எழுதி வருகின்றனர்.

இதையும் படிங்க: எச்.வினோத்த அடிச்சு சாவடிச்சிரலானு தோணுது! பார்த்திபனுக்கு அப்படி என்ன கோபம்?

ஒரு நடிகையை நான் மேலிருந்து கீழே பார்த்ததாகவும் ஏதோ இரட்டை வார்த்தைகளில் பேசியதாகவும் என்னை பற்றி கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. நான் அனைவரையும் சகோதரியாகவும் தாய்மார்களாகவும் தான் நினைத்து வருகிறேன். நான் சொன்னதே வேறு. ஆனால் அதை வேறு மாதிரி புரிந்து கொண்டு மீடியாக்கள் இதைப்பற்றி எழுதி வருகின்றன .

அதுமட்டுமல்லாமல் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த குஷ்புவின் முதுகை யாரோ ஒருவர் தட்ட அந்த இடத்திலேயே குஷ்பூ பளார் என அவர் கன்னத்தில் அறை விட்டார். அதைக் கூட நான் அந்த விழா மேடையில் பேசும் போது அவனை செருப்பு கழட்டி அடித்திருக்க வேண்டும் என கூறினேன். அப்படிப்பட்ட ஒரு நடிகை குஷ்பூ. இரும்பு பெண்மணி. அந்த மாதிரி இருக்க வேண்டும் என கூறினார் கே ராஜன். அவர் சொல்வதில் இருந்து என்ன பிரச்சனை நடந்தாலும் அது அப்பவே தட்டிக் கேட்க வேண்டும். முடியாத பட்சத்தில் வெளியில் வந்து சொல்லி அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோணத்தில் கே ராஜன் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ? விழி பிதுங்கி நிற்கும் ஜேசன் சஞ்சய்

Next Story