நான் யாரு? என் ரேஞ்ச் என்ன? கலைப்புலி தாணுவிடம் பிரச்சினை செய்த நடிகை!.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் ஏவிஎம் நிறுவனம் எப்படி ஒரு பெரிய நிறுவனமாக இருக்கிறதோ அதே போல் தான் தயாரிப்பில் ஒரு மதிப்பு மிக்க தயாரிப்பாளராக வலம் வருகிறார் கலைப்புலி எஸ். தாணு. இவரின் தயாரிப்பில் பல வெற்றி படங்கள் வந்திருக்கின்றன.
ஒரு சமயம் பிரபுதேவாவின் தந்தை தாணுவிடம் பிரபுதேவாவிற்காக ஒரு படம் பண்ண வேண்டும் என கூறியிருக்கிறார். அந்த சமயம் பிரபுதேவாவும் ஒரு பெரிய நடிகராக மிகவும் பீக்கில் இருந்திருக்கிறார். தாணுவும் சரி என்று சொல்ல அவரை வைத்து ஒரு படம் பண்ணலாம் என முடிவெடுத்திருக்கிறார்.
அப்போது சசி என்பவர் முதலில் பிரபுதேவாவிற்காக ஒரு கதையை சொல்ல அந்தப் படம் சில பல காரணங்களால் நின்று போனது. அதனை அடுத்து வசந்த் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். அதற்கு தாணு 6 மாதத்திற்குள் முடிக்கும் படி சொல்ல ஒரு வருடம் ஆகும் என சொல்லியிருக்கிறார் வசந்த்.
அதனால் அந்த வாய்ப்பும் விலகி போயிருக்கிறது. அதற்கு அடுத்தப் படியாக வந்த படம் தான் விஐபி படம். இந்தப் படத்தை சபா என்பவர் இயக்கினார். படத்தில் பிரபுதேவா, சிம்ரன், ரம்பா, அப்பாஸ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
படம் மிகவும் ஜாலியான நகைச்சுவை மிக்க படமாக வெளிவந்தது. ஆனால் முதலில் இந்தப் படத்தில் சிம்ரனுக்கு பதிலாக கமிட் ஆனவர் நடிகை லைலாவாம். இந்தப் படத்திற்கான பூஜை நேரத்தில் லைலாவுக்கு கொடுக்க வேண்டிய செக்கை தனது மேனேஜர் மூலமாக கொடுக்க சொல்லியிருக்கிறார் தாணு.
ஆனால் இதை வாங்க மறுத்த லைலா ‘ஏன் உங்க தயாரிப்பாளர் நேரில் வந்து என்னை பார்க்கமாட்டாரா? ஒரு தடவை கூட நேரில் பார்க்க வில்லை, இதெல்லாம் ஒரு புரடக்ஷனா?’ என்று கேட்டாராம். இது தாணுவுக்கு தெரிய வர ஆரம்பத்திலேயே
இப்படி பிரச்சினை பண்றாங்கனு முதலில் இந்த நடிகையை தூக்குடா என்று சொல்லிவிட்டு அதன் பிறகு தான் சிம்ரன் படத்திற்குள் வந்தாராம். இந்த தகவலை தாணுவே ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : ஹாலிவுட் இயக்குனரிடம் கதையை திருடி படமாக்கிய ஏ.ஆர் முருகதாஸ்… கண்டுப்பிடித்த இயக்குனர்!..