ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..
திரையுலகை பொறுத்தவரை நடிகருக்கோ, நடிகைக்கோ ஒரு சில வாய்ப்பு சில சமயம் அமையும். ஆனால், சில காரணங்களால் அவர்கள் எதிர்பார்த்தது போல அது அமையாது. எப்படியும் பின்னால் அது அமையும் என காத்திருப்பார்கள். ஆனால், பல வருடங்கள் ஆகியும் அது நடக்காமலே போய்விடும்.
பல நடிகர், நடிகைகளுக்கு அப்படி நடந்திருக்கிறது. நடிகர் விஜயகாந்த் நடிகர் திலகம் சிவாஜியுடன் வீரபாண்டி என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் ஒருமுறை வி.சேகரின் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க முயற்சிகள் நடந்தது. விஜயகாந்தும் ஆர்வமாக இருந்தார். ஆனால், அது நடக்காமலே போனது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..
கமலுக்கு சிவாஜியுடன் நெருக்கமாக இருந்தும் அவருடன் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ‘தேவர் மகன்’ படத்தில்தான் கிடைத்தது. அதோடு சரி. அதன்பின் அவர் சிவாஜியுடன் நடிக்கவில்லை. ரஜினிக்கு விடுதலை, படிக்காதவன், படையப்பா ஆகிய படங்களில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், சில நடிகைகளுக்கு சிறிய வயதிலேயே அம்மா வேடம் கிடைக்கும். அப்படி நடிகை லட்சுமிக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.
பாலச்சந்தர் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கி ரஜினி, மேனகா சுரேஷ், சரிதா என பலரும் நடித்து வெளியான திரைப்படம் நெற்றிக்கண். 1981ம் வருடம் வெளியான இந்த படத்தில் பெண்கள் மீது சபலம் கொண்ட வேடத்திலும், அதே கதாபாத்திரத்தின் மகனாகவும் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: போட்டோவே வேணாம்.. ரஜினி அழைத்தும் வர மறுத்த ரசிகர்! என்ன காரணம்னு கேட்டா ஆச்சரியப்படுவீங்க
இந்த படத்தில் லட்சுமியை நடிக்க வைக்க ஆசைப்பட்ட பாலச்சந்தர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த அவரை தொடர்பு கொண்டு சென்னை வர சொல்லி இருக்கிறார். லட்சுமியோ தயங்கி இருக்கிறார். ‘இந்த படத்தில் ரஜினிக்கு நீ ஜோடி’ என சொல்லி வரவழைத்திருக்கிறார். ஆனால், படத்திலோ வயதான ரஜினிக்கு வயதான மனைவி வேடத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் நடித்து முடித்திருக்கிறார். பாலச்சந்தரிடம் இதுபற்றி லட்சுமி கேட்க ‘கண்டிப்பாக ரஜினிக்கு ஜோடியாக ஒரு படத்தில் உன்னை நடிக்க வைக்கிறேன்’ என வாக்கு கொடுத்திருக்கிறார்.
ஆனால், அது நடக்கவே இல்லை. 43 வருடமாகியும் அந்த வாய்ப்பு லட்சுமிக்கு கிடைக்கவே இல்லை. அதனால், ‘ரஜினியை சந்திக்கும்போது இதுபற்றி அவரிடம் கண்டிப்பாக கேட்பேன்’ என பேட்டி கொடுத்தார் லட்சுமி. ஆனால், படையப்பா படத்திலும் ரஜினிக்கு அம்மா வேடம்தான் லட்சுமிக்கு கிடைத்தது. இப்போது லட்சுமிக்கு 71 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.