Connect with us
mgr

Cinema History

இறப்புக்கு முன் கடைசியாக என்னிடம் எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!.. பிரபல நடிகை உருக்கம்…

நடிகர் எம்.ஜி.ஆர் அவருடன் பழகியவர்களுக்கு பல அற்புதமான, மறக்க முடியாத, இனிமையான நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார். அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள், அவருடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரும் அவரை பற்றி சிலாகித்து பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.

60களில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த ஆளுமையாக இருந்தார் எம்.ஜி.ஆர். நாடகங்களில் 30 வருடங்கள் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்து 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறியவர் இவர். நாடோடி மன்னன் படம் இவருக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..

எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு கதாநாயகியுடன் ஒரு படத்தில் நடித்து, அவருக்கும் அந்த நடிகையின் நடிப்பு பிடித்து அந்த படமும் நன்றாக ஓடிவிட்டால் தொடர்ந்து அந்த நடிகையுடன் பல படங்களிலும் நடிப்பார். இப்படித்தான் சரோஜாதேவியுடன் 16 படங்கள் நடித்தார். ஜெயலலிதாவுடன் 14 படங்களில் நடித்தார்.

அதேபோல், மஞ்சுளா, லதா உள்ளிட்ட நடிகைகளுடனும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடித்த பல நடிகைகளுக்கும் பல வகைகளிலும் அவர் உதவி செய்திருக்கிறார். குறிப்பாக அதிக அளவில் நகைகளை கொடுத்திருக்கிறார் என பலரும் சொல்வார்கள். எம்.ஜி.ஆருடன் பல படங்களிலும் நடித்தவர் லதா.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….

நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், நாளை நமதே, மீனவ நண்பவன், நவரத்தினம், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருடன் லதா நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் அரசியல் கட்சியை துவங்கிய பின்
கட்சியிலும் அவரை செயல்பட வைக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், லதாவுக்கு அதில் விருப்பமில்லாமல் போனது.

MGR and Latha

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லதா ‘எம்.ஜி.ஆர் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு அவரை அவரின் வீட்டில் போய் பார்த்தேன். படுக்கையில் இருந்த அவர் சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தார். ‘ஏசி காரில்தானே வந்தாய்.. உனக்கு ஏன் இப்படி வேர்க்கிறது!. ஏசி இல்லாம நீ இருக்க மாட்ட.. ஏசி போட சொல்லட்டுமா?’ எனகேட்டார். மேலும், ‘உனக்கு எதாவது வேண்டுமா?’ எனவும் கேட்டார். அதுதான் நான் எம்.ஜி.ஆரை கடைசியாக பார்தது’ என லதா சொல்லியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top