Connect with us
ravi_main_cine

Cinema History

வெள்ளிவிழா நாயகன்!..பின்னால் இருக்கும் குரூர புத்தி!..ரவிச்சந்திரனை ஓங்கி அறைந்த நடிகை!..

இயக்குனர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் நடிகர் ரவிச்சந்திரன். நடித்த முதல் படத்திலேயே ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னனி நடிகராக வளர்ந்தார்.

ravi1_cine

நடனம், நடிப்பு, சண்டைப்பயிற்சி என அனைத்திலும் தன்னிகரற்ற நடிகராக விளங்கினார். ஆண்டுக்கு பத்து படங்கள் வீதம் வெளியாகி அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக திகழ்ந்தன. 60, 70 களில் முன்னனி நடிகராக விளங்கினார்.

இதையும் படிங்க : கவுண்டமணியை நடுசாமத்தில் அழுகவிட்ட பாக்யராஜ்… அடடடா! இதற்கு தானா?

ravi2_cine

இவர் நடித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் “காதலிக்க நேரமில்லை”, “இதயக்கமலம்”, “குமரிப்பெண்”, “நான்”, “மூன்றெழுத்து”, “அதே கண்கள்”, “உத்தரவின்றி உள்ளே வா” ஆகிய படங்களை குறிப்பிடலாம். தமிழ் , தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்தார். இப்படி ஒரு வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்த ரவிச்சந்திரனை பற்றி பழம்பெரும் நடிகை மேஜிக் ராதிகா அவரின் நடத்தை பற்றி சில தகவல்களை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ravi3_cine

‘மாலதி’ என்ற திரைப்படத்தில் ரவிச்சந்திரனும் மேஜிக் ராதிகாவும் ஜோடியாக கமிட் ஆகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். நீச்சல் குளத்தில் ஒரு காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ராதிகாவிடம் ரவிச்சந்திரன் தகாத முறையில் அத்துமீறியதாக ராதிகாவே அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். ரவிச்சந்திரனின் அந்த நடத்தையில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாத ராதிகா ரவிச்சந்திரனின் தலையை பிடித்து கோபத்தில் அடித்திருக்கிறார். இதெல்லாம் படமாக்கப்பட்டு கொண்டிருக்க இயக்குனர் கட் கட் என சொல்லியும் ஆத்திரம் தீராத ராதிகா மேலும் ரவிச்சந்திரனை அடி அடி என அடித்திருக்கிறார்.

ravi4_cine

உடனே படக்குழுவில் இருந்தோர் வந்து தடுக்க இனிமேல் இந்த படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டு ராதிகா கிளம்பி விட்டாராம்.vமேலும் ஏற்கெனவே ரவிச்சந்திரனிடம் 5 படங்கள் கமிட் ஆகியிருந்த நிலையில் அதை எல்லாம் கேன்சல் செய்தும் விட்டாராம் ராதிகா. இதை பேட்டியில் கூறிய போது ரவிச்சந்திரனை ஒரு சகோதரனாக தான் நான் பார்த்தேன். ஆனால் அவர் அப்படி செய்தது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது என கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top