பொறாமை இருக்க வேண்டியதுதான்! அதுக்காக இப்படியா? பிரபல நடிகையை விமர்சித்த மகிமா நம்பியார்

Published on: January 22, 2024
mahima
---Advertisement---

Actress Mahima Nambiar: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மகிமா நம்பியார். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை என்ற படத்தில் ஒரு பள்ளி மாணவியாக அறிமுகமானார் மகிமா நம்பியார். அறிவழகியாக நடித்து இளசுகளின் நெஞ்சங்களில் குடிபெயர்ந்தார். அந்தப் படத்தில் இருந்தே மகிமா நம்பியாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

குறிப்பாக அருண்விஜயுடன் அவர் ஜோடியாக நடித்த குற்றம் 23 படம் மிகவும் வரவேற்பை பெற்றது. அருண்விஜயுக்கும் மகிமா நம்பியாருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி மிகவும் ரசிக்கும் படியாக அமைந்தது. அதனை தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார் மகிமா நம்பியார்.

இதையும் படிங்க: ஸ்டைலீஸ் லுக்கில் அஜித்.. அஜர்பைசான்லயும் விடாத ரசிகர்கள்!.. தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்!..

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சந்திரமுகி 2. இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருப்பார் மகிமா நம்பியார். இவரது க்யூட்டான நடிப்பு மற்றும் பேச்சால் அனைவரையும் மிக எளிதாக கவரக்கூடியவர் மகிமா நம்பியார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியார் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார்.

அதில் மகிமா நம்பியாரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்டது. அதற்கு வேறு யார்? ரஜினிதான் என்று பளிச்சென்று பதில் சொன்னார். அதன் பிறகு பிடிக்காத நடிகை யார் என கேட்கப்பட்டது. அதற்கு பிடிக்காத நடிகை என்று யாருமில்லை என்று சொன்ன மகிமாவிடம் ‘சரி இந்த நடிகையிடம் இது எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றால் யாரை சொல்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: உதவி செய்த நடிகர் கஷ்டப்பட்ட போது திமிர் காட்டிய சிவகார்த்திகேயன்!… வாய்ப்பு கேட்ட காசு கொடுத்த அதிர்ச்சி!…

அதற்கு பதில் அளித்த மகிமா சாய்பல்லவி பெயரை கூறினார். ஏனெனில் சாய்பல்லவியை பார்க்கும் போது எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறாங்க? இவங்கள எப்படி நெருங்குறது? என்று யோசிக்க தோன்றுமாம். இதுதான் சாய்பல்லவியிடம் எனக்கு பிடிக்காது என மகிமா கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.