ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு தெரியாதா? கருணாநிதியின் ரகசியத்தை மனைவியிடம் போட்டுக்கொடுத்த மனோரமா

Published on: January 10, 2024
mano
---Advertisement---

Kalaingar Karunanithi: திரைத்துறையில் ஓய்வின்றி தன் இறுதிக்காலம் வரை உழைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி. தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கும் கருணாநிதியின் அர்ப்பணிப்பு என்பது ஏராளமே. எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் தன் உடல் பேணியை தனிக் கவனம் செலுத்தி காத்து வந்தார்.

யோகா, நடைப்பயிற்சி என வழக்கமாக கொண்டார் கருணாநிதி. கிட்டத்தட்ட 75 படங்களுக்கு கதை, திரைக்கதை , வசனம் எழுதியிருக்கிறார். புதினங்கள், மடல்கள், கட்டுரைகள் என எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார் கலைஞர்.

இதையும் படிங்க: எப்படிண்ணே நடிக்கிறீங்கன்னு கேட்ட தனுஷ் கையில நேஷனல் அவார்டு! என்கிட்ட வெறும் ஓடு.. புலம்பிய நடிகர்

இவரின் முதல் படம் ராஜகுமாரி. அந்தப் படத்தின் மூலம் கருணாநிதி மிகவும் பிரபலமானார். இவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தவர் எம்.ஆர்.ராதா. தூக்கு மேடை என்ற நாடகத்தின் போதுதான் கலைஞருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கலைஞரின் ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அவருக்கு பத்மாவதி அம்மாள், ராஜாத்தி அம்மாள் மற்றும் தயாளு அம்மாள் என மூன்று மனைவிகள். இதில் பத்மாவதி அம்மாள் இறப்பிற்கு பிறகு தயாளு அம்மாளை திருமணம் செய்தார். அதன் பிறகு ராஜாத்தி அம்மாளை திருமணம் செய்தது அவருடைய வீட்டை தவிர ஊருக்கே தெரியுமாம்.

இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…

அண்ணாவிற்கு தெரிந்தேதான் கருணாநிதியின் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாம். ஒரு சமயம் ஒரு விழாவிற்கு கருணாநிதி அவருடைய இரண்டு மனைவிகள் மனோரமா என பல பேர் வந்திருந்தார்களாம். அதில் கருணாநிதியுடனேயே ராஜாத்தி அம்மாள் நிற்பதை பார்த்துக் கொண்டிருந்தாராம் தயாளு அம்மாள்.

உடனே அருகே இருந்த மனோரமாவிடம் தயாளு அம்மாள் ‘இது யாரு’ என கேட்டிருக்கிறார். அதற்கு மனோரமா ‘ஊருக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு தெரியாதா? இதுதான் ராஜாத்தி அம்மாள்’ என்று சொல்லி உண்மையை போட்டுடைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…

இதை கூறும் போது கருணாநிதி நீண்ட நாள்களாக தெரியாமல் இருந்த விஷயத்தை மனோரமாதான் வெளிச்சம் போட்டு காட்டினார் என கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.