கவர்ச்சி அணுகுண்டு மந்த்ரா திரையுலகில் சரிவை சந்திக்க இதுதான் காரணமாம்...
90களில் இவர் தான் கனவு கன்னி. 6 வயசிலேயே தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர். முதலில் தமிழில் தான் அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ளார். படுகவர்ச்சியாக நடித்த போதும் அதிகம் கிசுகிசுக்கப்படாதவர்.
ஆரம்பத்தில் ராசி படம் வருகையில் அஜீத்துடன் நடித்த மந்த்ராவுக்கு கேரியர் டாப் கியரில் இருந்தது. ராசி நடிகை என்றே அழைத்தனர்.
கவர்ச்சி கட்டழகி மந்த்ராவைப் பார்த்து மயங்காதவர்கள் இல்லை. தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி பாம் என்று கொண்டாடினர்.
கவர்;ச்சி சூறாவளின்னு பேர் வாங்கிட்டாங்க. பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். விஜயுடன் லவ் டுடே, அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அருண் விஜய், ஜெயராமுடன் பல படங்களில் நடித்துள்ளார். உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐதராபாத்தில் செட்டிலாகி விட்டார். மந்த்ராவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிம்புவுடன் வாலு படத்தில் கடைசியாக நடித்து இருந்தார்.
இடையில் பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கண்ணன் வருவான், குபேரன், சிலம்பாட்டம், டபுள்ஸ், ஒன்பதுல குரு ஆகிய படங்களிலும் நடித்தார். ஆளுக்கொரு ஆசை படத்தில் மந்த்ரா என்ற தனது பெயரிலேயே நடித்து இருந்தார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார்.
தெலுங்கு படத்தில் தேஜாவைப் பத்தி நிறைய சொல்றாங்க. மகேஷ்பாபுவை வச்சி ஒரு படம் பண்ணிருக்காங்க. அதுல வில்லனோட கியூப்பா நடிக்க வச்சி என் மார்க்கட்ட சரிய வச்சிட்டாரு.
என் சினிமா வாழ்க்கை நாசமா போகக் காரணம் இந்த தேஜா தான்னு ஆதங்கப்படுகிறாங்க மந்த்ரா. தெலுங்குல சில சீரியல்கள், டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.