அஜித்துடன் என் மகள் ஆடுவதா?.. மேடையில் அவமானப்படுத்தப்பட்ட தல!.. யார் அந்த நடிகை தெரியுமா?..
இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் வகையில் வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித். ஆனால் ஆரம்பகாலங்களில் இவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் இவர் சொல்லவில்லை என்றாலும் இவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் நிறைய பேட்டிகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதுவரை அஜித் முன்பு அளித்த பேட்டிகளில் கூட எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி மட்டுமே கூறியிருப்பாரே தவிர யாரை பற்றியும் இதுவரை தவறாக பேசியதில்லை. என்ன நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பாங்கில் இருப்பவர் அஜித்.
அந்த வகையில் ஒரு விழா மேடையிலேயே பிரபல நடிகையின் அம்மாவால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார் அஜித். ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் அஜித் , கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஆனந்த பூங்காற்றே திரைப்படம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார்.
படம் வெளியாகி 100 நாள்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. ஆனால் இந்தப் படத்தில் கமிட் ஆன போதே அஜித் ஒரு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட 10 நாள்கள் மருத்துவமனையிலேயே இருந்த அஜித் மிகவும் கஷ்டப்பட்டு தான் மீண்டும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ஒரு பிரபல பத்திரிக்கை சார்பில் சினிமா விருதுகளை வழங்கும் விழாவை நடத்த ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை அஜித்திற்கு கொடுக்க நடிகைக்கான விருதை மீனாவுக்கு கொடுத்திருக்கிறது. அப்போது அஜித் மற்றும் மீனா இருவரும் ஒரே மேடையில் இருக்க விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி மேடையிலேயே இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என கேட்டிருக்கிறார்.
மீனாவும் சம்மதித்து ஆட ஆரம்பிக்கும் போது கீழே இருந்த மீனாவின் அம்மா வேகமாக மேடைக்கு வந்து கமல், ரஜினி கூட நடித்தவர் என் மகள். நேற்று வந்த ஒரு நடிகருடன் என் மகள் ஆட மாட்டாள் என சொல்லிவிட்டு ஆடவிடாமல் தடுத்தாராம். அப்போது அஜித் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி… நாடக மேடையில் ஒரு துயர சம்பவம்…