ஆஹா..அவங்களா இவங்க: வைரலாகும் விஜய் அஜித் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்.
சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் மட்டுமே நிரந்தரம். நடிகைகள் யாரும் நிலைத்து இருப்பதில்லை. ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். சில நடிகைகள் திருமணம் முடிந்த கையோடு கணவனுடன் சென்று வெளிநாட்டில் செட்டிலாகி விடுகிறார்கள்.
அப்படி திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான நடிகை தான் மீரா ஜாஸ்மின். பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மீரா ஜாஸ்மின். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.
பின்னர் விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, விஷாலுடன் சண்டைக்கோழி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென ரசிகர் பட்டாளம் உருவான சமயத்தில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். அதன் பின்னர் இவரை திரையில் பார்க்கவே முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். லேட்டஸ்ட் போட்டோ மட்டுமல்ல லேட்டஸ்ட் தகவலாக மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க உள்ளாராம்.
அதன்படி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளாராம். மீரா ஜாஸ்மின் ஏற்கனவே சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 4 படங்களில் நடித்துள்ள நிலையில், இது ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.