சூட்டிங் வரமாட்டேன்! ஆனால் சம்பளம் மட்டும் 12 கோடி வேணும் – இதென்ன நியாயம்? அட்டூழியம் பண்ணும் நயன்

Published on: July 21, 2023
nayan
---Advertisement---

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் டிரெய்லரால் ஆடிப்போயிருக்கின்றனர் நயனின் ரசிகர்கள். அந்த அளவுக்கு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு அம்மணி செம கெத்தா நடித்திருக்கிறார். ஏற்கெனவே இமைக்கா நொடிகள் படத்தில் சிபிசிஐடியாக நடித்து ரசிகர்களை மெர்சல் பண்ணியவர்.

அதே தூக்கலில் இந்த ஜவான் படத்திலும் மாஸ் காட்டியிருக்கிறார் நயன். ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் குழந்தைகள், ஒரு பக்கம் குடும்பம் என மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கெனவே திருமணத்திற்கு முன்பாகவே கமிட் ஆன படம் அன்னபூரணி. அந்தப் படத்தில் சமையல் நிபுணராக வருகிறாராம் நயன்.

nayan1
nayan1

ஏற்கெனவே அன்னபூரணி என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருப்பதால் நயன் நடிக்கும் இந்தப் படத்திற்கு பூரணி என்று தலைப்பை வைத்திருக்கிறார்களாம். திருமணம் , குழந்தைகள் என செட்டிலான பிறகு மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராக இருந்தாராம் நயன்.

ஆனால் படப்பிடிப்பு திருச்சியில் நடத்த திட்டமிட்ட போது திடீரென அவுட்டோர் சூட் என்றால் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாராம் நயன். ஏனெனில் அவரின் இரண்டு குழந்தைகளையும் விட்டு அவுட்டோர் சூட்டுக்கு மட்டும் வரமாட்டாராம். இந்தப் படம் மட்டும் இல்லை. இன்னும் வரப் போகும் படங்களுக்கு இதே கண்டீசன் தானாம்.

இதையும் படிங்க : ஐஸ்வர்யா ராஜேஷுக்கா இந்த நிலைமை? ‘துருவநட்சத்திரம்’ படத்தில் ஏற்பட்ட குளறுபடி! கடைசி நேரத்தில் குட்டைய கிளப்பிய கௌதம்

அதற்காக சென்னையிலேயே  படப்பிடிப்பை நடத்த முடியுமா? என்று புலம்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் டூப் வைத்துக் கொண்டு வேண்டுமென்றால் நடத்துங்கள் என்றும் சொல்கிறாராம். ஆனால் சம்பளம் மட்டும் 10  கோடியில் இருந்து 12 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். இவருக்கு கோடி கோடியாக கொடுத்துட்டு நாங்க தெர்க் கோடியில் உட்காரவா? என தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

nayan2
nayan2

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.