5 வருஷமா எல்லா படங்களும் ஃபிளாப்!. ஆனாலும் நயன்தாராவுக்கு பந்தா மட்டும் குறையலயே!..

nayanthara
Nayanthara: ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக கூட பல படங்களிலும் நடித்தார். சூர்யாவின் கஜினி படத்தில் கூட இரண்டாவது கதாநாயகியாகவே நடித்திருந்தார். ராஜா ராணி படத்திற்கு பின் நயன்தாராவின் கிராப் மேலே ஏறியது. நயன்தாரா சினிமாவை விட்டு விலகுவதாக சொல்லி அதன்பின் மீண்டும் நடிக்க வந்த திரைப்படம் அது.
அதன்பின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறினார். இந்த பட்டத்தை தான் நடிக்கும் படங்களின் டைட்டிலில் போட வேண்டும் என நெருக்கடியே கொடுத்தார். விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின் அந்த வேலையை விக்கி செய்ய துவங்கினார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோதுதான் நயனுக்கும் விக்கிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
சில வருடங்கள் காதலர்களாக சுற்றி வந்த இருவரும் அதன்பின் திருமணம் செய்து கொண்டனர். மேலும், வாடகைத்தாய் மூலம் இரு குழந்தைகளுக்கும் தாயாக மாறினார் நயன்தாரா. கடந்த 5 வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் வெளியான படங்களில் 95 சதவீதம் வெற்றியை பெறவில்லை.

2021-ல் வெளியான மலையாள படமான நிழல் படம் தோல்வி அடைந்தது. அதன்பின் நயன்தாரா கண் பார்வையற்றவராக நடித்து வெளியான நெற்றிக்கண் படமும் ஓடவில்லை. தெலுங்கில் வெளியான ஆரடுகுலா புல்லட் படமும் ஓடவில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த படத்திலும் நயன் நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் ஓடவில்லை. அதேபோல், O2 படமும் ஓடவில்லை. ஹிந்தியில் அக்ஷய்குமாருடன் நடித்த Gold படமும் தோல்வி. ஓடிடியில் வெளியான கனெக்ட் படமும் வரவேற்பை பெறவில்லை. ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படமும் தோல்வி அடைந்தது.
நயன்தாரா ஷோலோ கதாநாயகியாக நடித்த அன்னப்பூரணி படமும் ஓடவில்லை. கடைசியாக சமீபத்தில் மாதவன், சித்தார்த் ஆகியோரோடு நயன் இணைந்து ஓடிடியில் வெளியான டெஸ்ட் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. கடந்த 5 வருடங்களில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன் அடித்த ஜவான் படம் மட்டுமே ஹிட் அடித்தது. இப்படி தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா காட்டும் பந்தாவுக்கும், அலப்பறைக்கும் குறைச்சல் இல்லை என்கிறார்கள். சமீபத்தில் ‘இனிமேல் என்னை லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்க வேண்டாம் எனவும் நயன்தாரா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.